Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.11,024 பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. HD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) என்னும் சிறப்பு விற்பனையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 (Infinix Smart 20) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. 5200mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், எச்டிபிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களை கொண்ட இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலையானது 33 சதவீத தள்ளுபடி போக ரூ.13,499 ஆக இருக்கிறது. இதுபோக தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,475 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.11,024 விலைக்கு இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போனை வாங்கலாம். 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகை கிடைக்கிறது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.11,024 பட்ஜெட்ல 5200mAh பேட்டரி!

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 அம்சங்கள் (Infinix Smart 20 Specifications): 6.78 இன்ச் (1576 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 700 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. 240Hz டச் சாம்பிளிங் ரேட்டும் உள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்டிமேட் 12என்எம் (Octa Core MediaTek Helio G81 Ultimate 12nm) சிப்செட் உடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் யூனிட் மற்றும் எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற பர்பாமென்ஸ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே டிசைனையும் கொண்டுள்ளது. இந்த டிசைன் ஸ்மார்ட்போனுக்கு மாடர்ன் லுக்கை வழங்குகிறது. நோட்டிபிகேஷன்கள் மற்றும் சில முக்கிய தகவல்களை எளிதாகப் பார்க்கும் வகையில் டைனாமிக் பார் பீச்சர் உதவுகிறது.

கேமராவைப் பொறுத்தவரை, இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போனில் 8எம்பி மெயின் கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்பீ எடுக்கவும், வீடியோ கால்களை மேற்கொள்ளவும் 8எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏஐ கேம் (AI Cam), டூயல் வீடியோ (Dual Video), போர்ட்ரெய்ட் (Portrait), டைம்-லேப்ஸ் (Time-Lapse), சூப்பர் நைட் (Super Night) உள்ளிட்ட பல்வேறு கேமரா பீச்சர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஸ்மார்ட்போனில் 5200mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இருப்பினும், பாக்ஸில் 10W சார்ஜர் மட்டுமே கிடைக்கிறது. மேலும், 5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் உள்ளது. 7.7எம்எம் தடிமன் மற்றும் 189 கிராம் எடையுடன் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.

கூடுதல் அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போனில் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டிடிஎஸ் (DTS) சப்போர்ட் இடம்பெற்றுள்ளன. 3.5எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வசதியும் உள்ளது. இதன் மூலம் வயர்டு இயர்போன்களைப் பயன்படுத்த முடியும். மேலும், IP64 ரேட்டிங் உடன் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டியைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-ஃபை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும், ஷேடோ பிளாக் (Shadow Black), போலாரிஸ் டைட்டானியம் (Polaris Titanium), சன்லைக் ஆரஞ்ச் (Sunlike Orange), கிளவுட்லைட் ப்ளூ (Cloudline Blue) ஆகிய நான்கு கலர் ஆப்ஷன்களில் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Infinix Smart 20 with 4GB RAM Available At 33 Percent Discount in Flipkart Big Billion Days Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X