Home
Mobile

அறிமுகமானது புதிய இன்பினிக்ஸ் போன்.. பட்ஜெட் விலை.. 5200mAh பேட்டரி.. எல்சிடி டிஸ்பிளே.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 (Infinix Smart 20) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 அம்சங்கள் (Infinix Smart 20 specifications): 6.78-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1576 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அறிமுகமானது புதிய இன்பினிக்ஸ்  போன்.. பட்ஜெட் விலை..எந்த மாடல்?

தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்டிமேட் (MediaTel Helio G81 Ultimate) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

4ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய இன்பினிக்ஸ் போனில் உள்ளன.

XOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கம். அதேபோல் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவும் இந்த போனில் உள்ளது.

8எம்பி ரியர் கேமரா உடன் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன.

3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டிடிஎஸ், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வசதியும் இந்த போனில் உள்ளது.

அறிமுகமானது புதிய இன்பினிக்ஸ்  போன்.. பட்ஜெட் விலை..எந்த மாடல்?

5200mAh பேட்டரி உடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. சன் லைக் ஆரஞ்சு, கிளவுட்லைன் ப்ளூ, ஷேடோ பிளாக் மற்றும் போலரிஸ் டைட்டானியம் நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.13,999-ஆக உள்ளது. வரும் ஜூன் 12 -ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் இன்பினிக்ஸ் இந்திய ஆன்லைன் ஸ்டோர் வழியாக இந்த போன் விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 தள்ளுபடியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Smart 20 smartphone launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X