இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. ரூ.12,449 பட்ஜெட்ல 5200mAh பேட்டரி.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
பிரீமியம் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலைக்கு வாங்க வேண்டுமானால், தள்ளுபடி விலைக்கு கிடைக்கும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 (Infinix Smart 20) ஸ்மார்ட்போனை தாராளமாக வாங்கி கொள்ளலாம். 7.7 எம்எம் தடிமனில் ஸ்லிம் மாடலாக மட்டுமல்லாமல், 5200mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்து இருக்கிறது.
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 38 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியுடன் ரூ.12,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், பேடிஎம் பரிவர்த்தனைக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,449 விலைக்கு இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 அம்சங்கள் (Infinix Smart 20 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்டிமேட் 12என்எம் (Octa Core MediaTek Helio G81 Ultimate 12nm) சிப்செட்டை இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மாலி ஜி51 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் இருக்கிறது. டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் கிடைக்கிறது. ஆகவே, பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே டிசைனை கொண்டுள்ளது. 6.78 இன்ச் (1576 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 700 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொண்டுள்ளது. 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட மாடலாக இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் இருக்கிறது. 8 எம்பி மெயின் கேமரா மற்றும் வீடியோ கால்கள், செல்பீகளுக்காக 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவில் ஏஐ கேம் (AI Cam), டூயல் வீடியோ (Dual Video), போர்ட்ராய்டு (Portrait), டைம்-லேப்ஸ் (Time-Lapse), சூப்பர் நைட் (Super Night) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5200mAh பேட்டரியை இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 10W சார்ஜருடன் கிடைக்கிறது.
மேலும், 5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியுடன் 7.7 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. அதேபோல 189 கிராம் எடை மட்டுமே உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த விலையிலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது. டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11) உள்ளது.
மேலும், ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கிடைக்கிறது. ஷேடோ பிளாக் (Shadow Black), போலாரிஸ் டைட்டானியம் (Polaris Titanium), சன்லைக் ஆரஞ்ச் (Sunlike Orange) மற்றும் கிளவுட்லைட் ப்ளூ (Cloudline Blue) ஆகிய கலர்களில் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications