ஜூலை 25 குறிச்சாச்சு.. அடிமட்ட பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. IP64 ரேட்டிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடலாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 (Infinix Smart 10) வெளியாக இருக்கிறது. இந்த போனின் வெளியீட்டு தேதி, விற்பனை மற்றும் முக்கிய பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. அடிமட்ட பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இந்த போனுக்கான மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஜூலை 25ஆம் தேதி வெளியாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, விற்பனை மற்றும் வெளியீட்டு தேதி தெரிந்துவிட்டது என்று பட்ஜெட் பிரியர்கள் குஷியாக இருக்கும் நேரத்தில், அந்த போனின் முக்கிய பீச்சர்கள் அனைத்தும் உறுதியாகி இருக்கின்றன.

சொல்லப்போனால், இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 மாடலானது, ஏற்கனவே குளோபல் மார்கெட்டில் வெளியாகிவிட்டது. அதே பீச்சர்களே இந்திய வேரியண்ட்டில் கிடைக்க இருப்பதால், இன்பினிக்ஸ் நிறுவனம், அதை வெளியீட்டுக்கு முன்பே உறுதி செய்துவிட்டது. ஆனால், இந்த போனின் விலை விவரங்களை வெளியாகவில்லை.
இருப்பினும், பீச்சர்களை வைத்து பார்க்கும்போது, அடிமட்ட பட்ஜெட்டில் கிடைக்க இருப்பது தெரிகிறது. ஏனென்றால், இதற்கு முந்தைய மாடல்களில் கிடைத்த யுனிசோக் சிப்செட் இதிலும் கிடைக்க இருக்கிறது. இந்த சிப்செட் கொண்ட மாடல்கள் ரூ.10,000 அல்லது அதற்கும் கம்மியான பட்ஜெட்டிலேயே வெளியாகி இருக்கின்றன. ஆகவே, இதையும் அந்த பட்ஜெட்டில் சேர்த்து கொள்ளலாம்.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 அம்சங்கள் (Infinix Smart 10 Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 700 நிட்ஸ் சூப்பர் பிரைட்னஸ் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கிடைக்கின்றன. இன்பினிக்ஸ் ஏஐ (Infinix AI) மட்டுமல்லாமல், அதற்கான பட்டன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆக்டா கோர் யுனிசோக் டி7250 (Octa Core T7250) சிப்செட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட் சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி57 ஜிபியு (Mali 57 GPU) கிடைக்கிறது. அல்ட்ராலிங்க் (UltraLink) என்றும் பிரத்யேக கனெக்டிவிட்டி பீச்சர் கிடைக்கிறது. இந்த பீச்சர் மூலம் ப்ளூடூத் காலிங் செய்து கொள்ளலாம். இதற்கு நெட்வொர்க் தேவையில்லை. ஆனால், குறிப்பிட்ட தொலைவுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 போனில் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) மற்றும் போலக்ஸ் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Folax Voice Assistant) கிடைக்கிறது. மேலும், ஏஐ வால்பேப்பர் ஜெனரேட்டர் (AI Wallpaper Generator), ஏஐ நோட்ஸ் (AI Notes), ரைட்டிங் அசிஸ்டன்ட் (Writing Assistant) போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன.
8 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. இந்த கேமராவில் 2K வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், டூயல் வீடியோ மோட் மற்றும் ப்ரோ மோட் போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 போனில் IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
1.5 மீட்டர்களுக்கு டிராப் ரெசிஸ்டன்ட் டெஸ்ட் செய்துள்ளது. ஆகலே, 6 கார்னர்களிலும் டிராப் ரெசிஸ்டன்ட் எதிர்பார்க்கலாம். குளோபல் வேரியண்ட்டை போலவே டைட்டானியம் சில்வர் (Titanium Silver), ஸ்லீக் பிளாக் (Sleek Black), ஐரிஸ் ப்ளூ (Iris Blue) மற்றும் ட்வைலைட் கோல்டு (Twilight Gold) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








