ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.7066 போதும்.. 6000mAh பேட்டரி.. 2TB மெமரி.. 18W பாஸ்ட் சார்ஜிங்.. 8GB ரேம்.. எந்த மாடல்?
அடிமட்ட பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 18W பாஸ்ட் சார்ஜிங், 8 ரேம், 2 டிபி மெமரி, IP64 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், டூயல் ஸ்பீக்கர்கள், மற்றும் எச்டிபிளஸ் டிஸ்பிளேவுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 பிளஸ் (Infinix Smart 10 Plus) வெளியாகி இருக்கிறது. இன்பினிக்ஸ் ஏஐ கொண்ட இந்த பட்ஜெட் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மலேசிய மார்கெட்டில் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 பிளஸ் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 9 மாடல் விற்பனைக்கு கிடைப்பதால், இங்கும் எதிர்பார்க்கலாம். இதனாலேயே இந்த மாடலுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. பேட்டரி பேக்கப் அதிகமாக விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு பக்காவாக இருக்கிறது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 பிளஸ் அம்சங்கள் (Infinix Smart 10 Plus Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு எக்ஸ்ஓஸ் 15.1 (XOS 15.1) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படி ஆக்டா கோர் யுனிசோக் டி7250 (Octa Core UNISOC T7250) சிப்செட் கிடைக்கிகது. மாலி ஜி57 எம்சி1 ஜிபியு (Mali G57 MC1 GPU) வருகிறது.
4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொண்ட மற்றொரு வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. 2 வேரியண்ட்களிலும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) சப்போர்ட் கிடைக்கிறது. பட்ஜெட்டில் இது பக்காவான ஆப்ஷனாகும்.
6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் மற்றும் 700 நிட்ஸ் எச்பிஎம் மோட் (HBM Mode) கிடைக்கிறது.
இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 பிளஸ் போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த அடிமட்ட பட்ஜெட்டில் அதிக பேட்டரி கேபாசிட்டி கிடைப்பது, ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தரக்கூடியதாகும். டைனாமிக் பார் பீச்சருக்கு ஏற்ப பஞ்ச்-ஹோல் கேமரா டிசைன் கிடைக்கிறது.
ஆகவே, 8 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் 8 எம்பி ரியர் கேமரா வருகிறது. ரியர் கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் செல்பீ கேமராவில் பிக்சட் போகஸ் கிடைக்கிறது. இந்த கேமராவில் 2K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இதுபோக ஏஐ கேம் (AI Cam), டூயல் வீடியோ மோட் (Dual Video Mode), சூப்பர் நைட் (Super Night) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
ஸ்லீக் பிளாக் (Sleek Black), டைட்டானியம் சில்வர் (Titanium Silver), ஐரிஸ் ப்ளூ (Iris Blue) மற்றும் ரூபி ரெட் (Ruby Red) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 4 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.7,066ஆகவும், 8 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.8,078ஆகவும் இருக்கிறது. இது மலேசியாவின் மலேசிய ரிங்கிட்டில் இருந்து இந்திய விலைக்கு மாற்றப்பட்ட விலையாகும்.


Click it and Unblock the Notifications