Home
Mobile

அடி கொளுத்தும் ஆர்டர்... ரூ.6799 க்கு இப்படி ஒரு முரட்டு போன் கிடைச்சா யாரு விடுவா.. எந்த மாடல்?

தூசி மற்றும் நீர் தெறிப்புகளை எதிர்க்கும் ஐபி64 ரேட்டிங், 5000mAh பேட்டரி, ஏஐ அம்சங்களுடன் ஃபோலாக்ஸ் ஏஐ வாய்ஸ் அசிஸ்டென்ட் என.. ரூ.7000 க்குள் என்கிற பட்ஜெட்டில் சிக்காத ஒரு ஸ்மார்ட்போன் ரூ.6799 க்கு வாங்க கிடைத்தால், யாருதான் விடுவா? அது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 (Infinix Smart 10) ஸ்மார்ட்போன் ஆகும்.

தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் நடக்கும் பிக் பேங்க் தீபாவளி சேல் 2025 விற்பனையின் கீழ், இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் எம்ஆர்பி ஆன ரூ.8,999 க்கு பதிலாக ரூ.6,799 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

ரூ.6799 க்கு இப்படி ஒரு முரட்டு போன் கிடைச்சா யாரு விடுவா!

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் எச்டி பிளஸ் (720 x 1600 பிக்சல்ஸ்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இதில் 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 700 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் மற்றும் 240ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் ஆகியவைகளும் உள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் யுனிசாக் டி7250 சிப்செட் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 4ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜையும் ஆதரிக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த போன் 4 வருட லேக்-ப்ரீ அனுபவத்திற்காக TÜV SÜD சான்றிதழை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போன் ஆனது 8 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை பேக் செய்கிறது. இது டூயல் வீடியோ மோட் ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது. மேலும் பின்பக்க மற்றும் முன்பக்க கேமராக்கள் இரண்டும் 30fps வேகத்தில் 2கே வீடியோ பதிவை ஆதரிக்கின்றன.

பேட்டரியை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போன் ஆனது யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக 15W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஐபி64 ரேட்டிங் தூசி மற்றும் ஸ்பிளாஸ்-எதிர்ப்பு கட்டமைப்பை கொண்டுள்ளது.

ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 15.1 உடன் வருகிறது. இது தனிப்பட்ட வாய்ஸ் அசிஸ்டென்ட், ஃபோலாக்ஸ் ஏஐ உட்பட பல இன்பினிக்ஸ் ஏஐ அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டாக்குமெண்ட் அசிஸ்டென்ட் மற்றும் ரைட்டிங் அசிஸ்டென்ட் போன்ற ஏஐ ஆதரவு கொண்ட ப்ரொடெக்டிவ் டூல்களையும் ஆதரிக்கிறது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, டிடிஎஸ் (DTS) ஆல் டியூன் செய்யப்பட்ட டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், எப்எம் ரேடியோ மற்றும் ஓடிஜி ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் அல்ட்ராலிங்க் அம்சத்தையும் ஆதரிக்கிறது, இது செல்லுலார் நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் தகுதியான பிற இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வாய்ஸ் கால்களை செய்ய அனுமதிக்கிறது. கடைசியாக அளவீட்டில் 165.62 x 77.01 x 8.25மிமீ மற்றும் எடையில் 187 கிராம் உள்ளது.

பிளிப்கார்ட் தீபாவளி சேல் 2025 இல் வேறு என்னென்ன இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது?
இன்பின்க்ஸ் நோட் 50எஸ் - ரூ.13,999
இன்பின்க்ஸ் நோட் 50எக்ஸ் - ரூ.0,749
இன்பின்க்ஸ் ஜிடி 30 ப்ரோ - ரூ.22,999
இன்பின்க்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் - ரூ.10.749
இன்பின்க்ஸ் ஜிடி 30 - ரூ.16,999
இன்பின்க்ஸ் ஜீரோ பிளிப் ரூ.38,749

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Smart 10 Is Best 4G Phone You Should Not Miss in Flipkart Diwali Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X