Home
Mobile

யார்ரா நீங்கலாம்.. கமகமனு வாசம் அடிக்கும் Scented Phone.. ரூ.20,000 பட்ஜெட்.. ஏப்.18 அறிமுகம்.. என்ன மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் நோட் 50எக்ஸ் ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்குப் பிறகு, தனது நோட் 50 சீரீஸில் மற்றொரு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அது இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி பிளஸ் (Infinix Note 50s 5G Pus) ஸ்மார்ட்போனாகும்.

இது 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் (டைட்டானியம் கிரே, ரூபி ரெட் மற்றும் மரைன் டிரிஃப்ட் ப்ளூ) ஏப்ரல் 18 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவற்றில், கடைசியாக உள்ள கலர் ஆப்ஷன் சற்று சுவாரஸ்யமான ஆப்ஷனாகும். ஏனெனில் இது மைக்ரோஎன்காப்சுலேஷன் தொழில்நுட்பத்துடன் (Microencapsulation technology,) பொருத்தப்பட்டிருப்பதாக இன்பினிக்ஸ் கூறுகிறது. குறிப்பிட்ட தொழில்நுட்பம் ஆனது இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனை நீண்ட கால நறுமணத்துடன் வைத்திருக்குமாம்.

யார்ரா நீங்கலாம்.. கமகமனு வாசம் அடிக்கும் Scented Phone!

இந்த வாசனை தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது? இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை எனர்ஜிசிங் சென்ட்-டெக் என்று சந்தைப்படுத்துகிறது. இந்த செயல்முறை ஃபோனின் வேகன் லெதர் பின்புற பேனலில் பதிக்கப்பட்ட நுண்ணிய காப்ஸ்யூல்களுக்குள் வாசனை மூலக்கூறுகளை பிடித்து வைக்கிறது. இதன் விளைவாக, ஸ்மார்ட்போன் படிப்படியாக காலப்போக்கில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் வாசனையை வெளியிடும்.

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த வாசனை நுட்பமானதாகவும் நீண்ட காலம் நீடிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் அதன் தீவிரம் மற்றும் கால அளவு ஆனது ஸ்மார்ட்போன் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளை பொறுத்து மாறுபடலாம். இந்த வாசனை - ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் என்று இன்பினிக்ஸ் நிறுவனம் கூறுகிறது.

மேலும் இந்தியாவில் இந்த போன் ரூ.20,000 க்கும் குறைவான விலை நிர்ணயத்தின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர்த்து இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. அதிகாரப்பூர்வ ரெண்டர்கள் இது 64எம்பி சோனி IMX682 சென்சார் பிரைமரி கேமராவாக கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இந்த ஏப்ரல் மாதத்தில் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன? ரியல்மி நார்சோ 80 ப்ரோ (Realme Narzo 80 Pro) ஏப்ரல் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது 120Hz டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட், டூயல் ரியர் கேமரா செட்டப், 80W சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாம். விலை ரூ.20,000 க்குள் இருக்கலாம்.

ஐக்யூ இஸட்10 (iQOO Z10) ஸ்மார்ட்போன் ஏப்ரல் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது 120Hz குவாட்-கர்வ்டு டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட், 50MP டூயல் ரியர் கேமரா செட்டப், 90W ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 7,300mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டிருக்கலாம். இது ரூ.21,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

மேலும் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன சிஎம்எப் போன் 2 (CMF Phone 2) ஸ்மார்ட்போன் ஆனது சில வடிவமைப்பு மாற்றங்களுடன் இதன் ஏப்ரல் மாதமே அறிமுகப்படுத்தப்படலாம் என்பது போல் தெரிகிறது. ஒரு லேட்டஸ்ட் டீஸரின் படி, சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது புதிய மேட் பினிஷ் (Matte finish) உடன் வரக்கூடும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

சிஎம்எப் போன் 2-வில் உள்ள ஸ்க்ரூக்கள் ஆனது சிஎம்எப் போன் 1 மாடலில் உள்ள அதே நிலையில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. ஆக இரண்டு போன்களுக்கான ஆக்சஸெரீஸ்களும் பொதுவானதாக இருக்க வாய்ப்புள்ளது. விலையை பொறுத்தவரை சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போன் (CMF Phone 2 Expected Price in India) ஆனது ரூ.19,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Infinix Scented Phone Infinix Note 50s 5G Plus under Rs 20000 to launch in on April 18
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X