பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இன்பினிக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப அம்சத்துடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு சிறந்த திரைவிகிதம் மற்றும் அருமையான பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இன்பினிக்ஸ் எஸ்4 சாதனத்தில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி22 மற்றும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி + 2எம்பி + 5எம்பி +2 எம்பி என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா,ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஸ் உள்ளட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.
இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.8,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications