Home
Mobile

மார்கெட் மிரளுது.. ரூ.18,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இன்பிளிக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலான இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் (Infinix NOTE Edge) அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்லிம் டிஸ்பிளே டிசைனில் 6500mAh பேட்டரியை கொடுத்துள்ளது. மேலும், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் மலிவு விலைக்கு கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களை கொடுப்பதில் இன்பினிக்ஸ் நிறுவனம் தனியிடம் பிடித்துள்ளது.மேலும், டிசைனும் பிரீமியம் மாடல்களுக்கு நிகராக இருப்பதால், விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல குளோபல் மார்கெட்டில் இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

மார்கெட் மிரளுது.. ரூ.18,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி!

பெயருக்கு ஏற்ப 7.2 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி கொடுக்கிறது. இந்த பாடியில் 6500mAh பேட்டரி கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளேவும் கிடைத்துள்ளது. லூனார் டைட்டானியம் (Lunar Titanium), ஸ்டெல்லர் ப்ளூ (Stellar Blue), ஷேடோ பிளாக் (Shadow Black) மற்றும் சில்க் கிரீன் (Silk Green) ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் லெதர் லைக் பேக் பேனலும் உள்ளது.

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது. மேலும், ஃபோலக்ஸ் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (FOLAX AI Assistant) கொடுத்துள்ளது. இந்த வாய்ஸ் அசிஸ்டன்ட் அக்சஸ் கொடுக்க கஸ்டமைசபிள் பட்டன் உள்ளது. மேலும், 3 மேஜர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்கிரேட்கள் மற்றும் 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.

இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் அம்சங்கள் (Infinix NOTE Edge Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட்டை இந்த இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்துள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது.

மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்கிறது. 6.78 இன்ச் (2644 x 1208 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 1.5K ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொடுத்துள்ளது.

50 எம்பி மெயின் கேமரா கிடைத்துள்ளது. இதில் 2K ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 13 எம்பி செல்பீ கேமரா கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஐஆர் சென்சார் (IR Sensor) இந்த இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ளது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது.

ஜேபிஎல் (JBL) பேக்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி உள்ளது. மேலும், 10W ரிவர்ஸ் சார்ஜிங் கொடுத்து இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் இந்த இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,188ஆக உள்ளது. இதே விலைக்கு இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix NOTE Edge 6500mAh Battery 45W Fast Charging Launched Under Rs 20000 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X