மொத்த மார்கெட் வெயிட்டிங்.. 7.78 மிமீ தடிமனில் 6500mAh பேட்டரி.. 3D டிஸ்பிளே. 50MP கேமரா.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் ஸ்லிம் டிசைன் கொண்ட மாடலை தேடிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டுவைக்கும்படி இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி (Infinix Note Edge 5G) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி இப்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வெறும் 7.78 மிமீ தடிமனில் 6500mAh பேட்டரியை கொடுப்பதால், அதிக பேக்கப் விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையேயும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. புதிய இன்பினிக்ஸ் மாடல்கள் வழக்கமாக கிடைப்பதை போலவே இந்த மாடலும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த செக்மெண்ட்டில் ஸ்லிம்மஸ்ட் மாடலாக இருக்கும் என்று இன்பினிக்ஸ் தெரிவித்துள்ளது.

ஏனென்றால், 7.78 மிமீ தடிமன் மட்டுமே கொடுக்க உள்ளது. இதைவிட ஸ்லிம் மாடல்கள் இருக்கின்றன. ஆனால், இந்த இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6500mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) புரொடெக்சனை இந்த நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்க உள்ளது.
இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி அம்சங்கள் (Infinix Note Edge 5G Specifications): 1.5K ரெசொலூஷன் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க உள்ளது. லோவ் ப்ளூ லைட், டியூவி ரெய்ன்லேண்ட் சர்டிபிகேஷனை கொடுத்து உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 (Octa Core MediaTek Dimensity 7100) சிப்செட்டை இந்த இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இதற்கு ஏற்ப 90 எப்பிஎஸ் (FPS) கேமிங் அவுட் கேமிங் பிரியர்களுக்கான பிரத்யேக பீச்சர்களையும் கொடுத்து உள்ளது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் மோட் (Performance Mode), மேஜிக் வாய்ஸ் சேஞ்சர் (Magic Voice Changer), நெட்வொர்க் என்ஹான்ஸ்மெண்ட் (Network Enhancement) கிடைக்கிறது.
மேலும், பேட்டரி ஹீட் கன்ட்ரோலுக்காக ஃபைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆடியோவில் ஜேபிஎஸ் (JBL) சவுண்டெட் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கொடுக்கப்பட்டு உள்ளது. டிசைனிலும் ஆர்ஜிபி ஹாலோ லைட் (RGB Halo Light) கிடைக்கிறது. இதை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். நேட்டிபிகேஷன்களுக்கு மற்றும் இன்டிகேட்டராக இருக்கிறது.
IP55 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட்டை (Dust & Splash Resistant) இந்த இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. வீடியோ கால்கள், செல்பீகளுக்கு 13 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டுள்ளது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் எதிர்பார்க்கலாம்.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரியை கொடுக்கிறது. இந்த பேட்டரிக்கு 10W ரிவர்ஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. லூனார் டைட்டானியம் (Lunar Titanium), ஸ்டெல்லர் ப்ளூ (Stellar Blue) மற்றும் சில்க் கிரீன் (Silk Green) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications








