Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் 3டி கர்வ்ட் டிஸ்பிளேவை கொடுப்பது மட்டுமல்லாமல், 6500mAh பேட்டரியுடன் இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி (Infinix NOTE Edge 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் 50 எம்பி கேமராவை கொடுக்கிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலையை பார்ப்போம்.

இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி அம்சங்கள் (Infinix NOTE Edge 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) கொடுத்து உள்ளது. 3 ஓஎஸ் அப்டேட்களை கொண்டுள்ளது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி!

மேலும், 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கின்றன. 6.78 இன்ச் (2644 x 1208 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளேவை இந்த நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனை கொடுத்து இருக்கிறது. 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2800Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங், ஏஐ கேம் (AI CAM), போர்ட்ராய்டு (Portrait), சூப்பர் நைட் (Super Night), ஏஐஜிசி போர்ட்ராய்டு (AIGC Portrait) உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன.

மேலும், டூயல் வீடியோ (Dual Video), ஸ்லோவ் மோஷன் (Slow Motion) கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 13 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் 4K ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. IP65 ரேட்டிங் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி!

45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. 7.2 எம்எம் தடிமன் மற்றும் 185 கிராம் எடை கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஐஆர் சென்சார் (IR Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. ஜேபிஎல் டியூனிங் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆகவும் இருக்கிறது. கிரீன் (Green), ப்ளூ (Blue) மற்றும் டைட்டானியம் (Titanium) ஆகிய மூன்று கலர்களில் கிடைக்க உள்ளது.

பிப்ரவரி 25ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் இன்பினிக்ஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் ஆகியவற்றில் வாங்கி கொள்ளலாம். அறிமுக சலுகையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது அல்லது ரூ.2000 எக்ஸ்சேஞ் போனஸை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Infinix NOTE Edge 5G With 6500mAh Battery Launched in India Sale From February 25 on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X