Home
Mobile

பிப்.25 க்கு அப்புறம் இதுதான்.. ரூ.19,999 பட்ஜெட்ல 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட் விலையில் இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி (Infinix NOTE Edge 5G) ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. இந்திய மார்கெட்டில் டிஸ்கவுண்ட் விலையுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. 6.78 இன்ச் 3டி கர்வ்ட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

பிப்ரவரி 25ஆம் தேதி இந்த இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்க உள்ளது. 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.21,999 ஆகவும், 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999 ஆகவும் இருக்கிறது. மேலும், மற்றொரு வேரியண்ட் உள்ளது.

பிப்.25 க்கு அப்புறம் இதுதான்.. ரூ.19999 பட்ஜெட்ல 3D கர்வ்ட் டிஸ்பிளே!

8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999 ஆக இருக்கிறது. இந்த மார்கெட் விலையில் இருந்து ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட் போக வாங்க கிடைக்கிறது. ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு இந்த உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட உள்ளது. மேலும், ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுக்கப்பட உள்ளது.

இதுபோக இஎம்ஐ சலுகைகளும் கொடுக்கப்பட உள்ளன. கிரீன் (Green), ப்ளூ (Blue) மற்றும் டைட்டானியம் (Titanium) ஆகிய மூன்று கலர்களில் இந்த இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களும் 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் இந்த ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்டு உள்ளன.

இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி அம்சங்கள் (Infinix NOTE Edge 5G Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2644 x 1208 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. 3டி கர்வ்ட் (3D Curved) டிசைனில் 1.5K ரெசொலூஷன், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. மேலும், 2800Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆகவே, 3டி கர்வ்ட் டிஸ்பிளே இருந்தாலும் புரொடெக்சன் பக்காவாக இருக்கும். ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட்டை கொடுத்துள்ளது.

மேலும், மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) இந்த இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 13 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதில் 2K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி கிடைத்து உள்ளது. மேலும், 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Infinix NOTE Edge 5G With 50MP Camera Sale From Tomorrow Check Price Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X