Home
Mobile

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Infinix 5ஜி போன்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

இந்தியாவில் நாளை (பிப்ரவரி 18) இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி (Infinix Note Edge 5G) எனும் புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போன் அறிமுகமாகும். அதன்பின்பு பிளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி அம்சங்கள் (Infinix Note Edge 5G Specifications): 1.5K ரெசொலூஷன் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனின் டிஸ்பிளேவில் உள்ளன.

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 (Octa Core MediaTek Dimensity 7100) சிப்செட் உடன் இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.

IP55 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உடன் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் ஜேபிஎல் (JBL) சவுண்டெட் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6500mAh பேட்டரி உடன் இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபார்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். இதுதவிர பேட்டரி ஹீட் கன்ட்ரோலுக்காக ஃபைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

XOS16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

இந்த போனில் ஆர்ஜிபி ஹாலோ லைட் (RGB Halo Light) ஆதரவு உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவும் இந்த போனில் உள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.18,000 விலையில் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note Edge 5G will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X