இன்பினிக்ஸ் நோட் 8, நோட் 8ஐ அறிமுகம்: டூயல் கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்!

|

இன்பினிக்ஸ் நோட் 8 மற்றும் நோட் 8 ஐ ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 8 மற்றும் நோட் 8ஐ

இன்பினிக்ஸ் நோட் 8 மற்றும் நோட் 8ஐ

இன்பினிக்ஸ் நோட் 8 மற்றும் நோட் 8ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகின்றன. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இன்பினிக்ஸ் நோட் 8 இரட்டை செல்ஃபி கேமராக்களை கொண்டுள்ளது. சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக ஸ்மார்ட்போன்களில் டி.டி.எஸ் ஆடியோ செயலாக்கமும் வழங்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் நோட் 8, இன்பினிக்ஸ் நோட் 8i: விலை

இன்பினிக்ஸ் நோட் 8, இன்பினிக்ஸ் நோட் 8i: விலை

இன்பினிக்ஸ் நோட் 8 ஸ்மார்ட்போன் இந்திய விலைப்படி சுமார் ரூ.14,700 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சரியான விலை இதுவரை வெளியாகவில்லை. இன்பினிக்ஸ் நோட் 8i இன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இன்பினிக்ஸ் நோட் 8: அம்சங்கள்

இன்பினிக்ஸ் நோட் 8: அம்சங்கள்

இன்பினிக்ஸ் நோட் 8 ஸ்மார்ட்போன் இரண்டு நானோ சிம் கார்ட்களுடன் வருகிறது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 7.1 இல் இயங்குகிறது. 6.95 இன்ச் எச்டி+ (720x1,640 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, 6ஜிபி ரேம் இதில் இருக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 8 கேமரா அம்சங்கள்

இன்பினிக்ஸ் நோட் 8 கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்களை பொருத்தவரையில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 2 மெகாபிக்சல் இரண்டாலம் நிலை மேக்ரோ ஷூட்டர் லென்ஸ், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் ஆகியவை அடங்கும். முன்புறத்தில் 16 மெகாபிக்சல் முதன்மை கேமராவோடு இரட்டை செல்பி கேமரா அமைப்பு இருக்கிறது.

"எம்மா வீட்டை சுத்தப்படுத்து"- உத்தரவு எஜமான்: அட்டகாச ரோபோட் க்ளீனர் அறிமுகம்!

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

இன்பினிக்ஸ் நோட் 8 ஸ்மார்ட்போனில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி உள்ளது. 4ஜி எல்டிஇ, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5200mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது.

இன்பினிக்ஸ் நோட் 8i: அம்சங்கள்

இன்பினிக்ஸ் நோட் 8i: அம்சங்கள்

இன்பினிக்ஸ் நோட் 8i ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 7.1 இல் இயங்குகிறது. அதோடு இதில் 6.78 இன்ச் எச்டி+ (720x1,640 பிக்சல்கள்) டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது இந்த ஸ்மார்ட்போனும் 6 ஜிபி ரேம் அம்சம் கொண்டது.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் கேமரா இதில் இருக்கிறது. செல்பிக்கென முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 5200mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Infinix Note 8, Note 8i Launched with Punch Hole Display: Here the Price and Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X