4ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரியோடு அறிமுகமான இன்பினிக்ஸ் நோட் 7!
இன்பினிக்ஸ் நோட் சீரிஸின் தொடராக இன்பினிக்ஸ் நோட் 7 இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுளள்ளது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அட்டகாச அம்சங்களை கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை மற்றும் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 7
இன்பினிக்ஸ் நோட்-சீரிஸின் சமீபத்திய சாதனமான இன்பினிக்ஸ் நோட் 7 இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்பினிக்கஸ் 5-ன் வாரிசாக இந்த புதிய சாதனம் பிலிப்பைன்ஸ் உட்பட சில ஆசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாதனம் மீடியாடெக் ஜி 70 எஸ்ஓஎஸ், 6.95 இன்ச் டிஸ்ப்ளே, 48 மெகாபிக்சல் குவாட் - கேமரா, கைரேகை சென்சார் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 7: விலை மற்றும் விற்பனை
இன்ஃபினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒரே வேரியண்டில் வருகிறது. சாதனத்தின் விலை ரூ.11,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஈதர் பிளாக், ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் பொலிவியா ப்ளூ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும். சாதனம் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வருகிறது.

இன்பினிக்ஸ் நோட் 7: அம்சங்கள்
இன்பினிக்ஸ் நோட் 7., 6.95 இன்ச் எச்டி + பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவுடன் 20.5: 9 விகிதத்துடன் வருகிறது. இன்பினிக்ஸ் நோட் 7 மீடியாடெக் ஹீலியோ ஜி 70 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. இன்பினிக்ஸ் 256 ஜிபி சேமிப்பு வசதி வரை விரிவாக்க சிறப்பு மெமரி கார்டு ஸ்லாட்டையும் கொண்டுள்ளது. சாதனத்தின் ஓரத்தில் கைரேகை ஸ்கேனர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் Android 10 அடிப்படையிலான XOS இல் இயங்குகிறது.

குவாட் கேமரா அமைப்பு
இன்ஃபினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. கேமரா அமைப்பு 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

16 மெகாபிக்சல் செல்பி கேமரா
பின்புற கேமரா அமைப்பில் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. சாதனத்தின் முன் கேமரா பஞ்ச் துளையில் அமைந்துள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது. மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் வழியாக 18W சார்ஜ் செய்யக்கூடிய 5,000 mAh பேட்டரியுடன் இந்த சாதனம் வருகிறது.


Click it and Unblock the Notifications