கண்ணுக்கு குளிர்ச்சியான நிறத்தில் இன்பினிக்ஸ் நோட் 7 செப்டம்பர் 16 அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் பல்வேறு அம்சங்களோடு செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன்
இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 16 ஆம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் தொழிற்சாலை தயாரிப்பு படங்கள் ஆன்லைனில் வெளியாகின. இன்பினிக்ஸ் நோட் 7 மீடியாடெக் ஹீலியோ ஜி 70 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி 70 SoC
இன்பினிக்ஸ் நோட் 7 மீடியாடெக் ஹீலியோ ஜி 70 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் ரியல்மி சி 3 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதன்மூலம் முந்தைய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் அம்சங்களோடு இந்த மாடல் பிரத்யேக அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஃபாரஸ்ட் கிரீன் நிறத்தில் அறிமுகம்
இந்த ஸ்மார்ட்போனானது பொலிவியா ப்ளூ, ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் ஈதர் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் கேமரா மற்றும், 6.95 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் நோட் 7 இன் அம்சங்கள்
இன்பினிக்ஸ் நோட் 7 இன் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இன்பினிக்ஸ் நோட் 7 பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது செவ்வக வடிவிலான நான்கு கேமராக்கள் உள்ளது. மேலும் HD+ தெளிவுத்திறன், 20.5: 9 விகிதத்துடன் 6.95 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

128 ஜிபி சேமிப்பு விருப்பம்
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 128 ஜிபி சேமிப்பு விருப்பத்தோடு கூடுதல் சேமிப்பு வசதிக்கு மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் உள்ளது. இன்பினிக்ஸ் நோட் 7 5,000 mAh பேட்டரி 18W வேகமான சார்ஜிங் செய்யும் அம்சம் இதில் உள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, XOS 6.0 UI உடனும் செல்பி வசதிக்கென 16 மெகாபிக்சல் கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம்
ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு இதன் ஒருபக்கத்தில் கைரேகை சென்சார் வசதியும் உள்ளது. செப்டம்பர் 16 ஆம் தேதி இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வரும்போது கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications