இவ்ளோ கம்மி விலைக்கு பேக் பேனல் டிஸ்பிளே, 12GB ரேம், 6500mAh பேட்டரி, 90W சார்ஜிங், IP64-ஆ.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் ஆனது, பேக் பேனலில் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே (Active Matrix Display) கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. என்ன மாடல்? எப்போது அறிமுகம்? வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
எந்த மாடல்? இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ (Infinix Note 60 Pro) ஸ்மார்ட்போனை இந்தியாவிற்கு கொண்டுவர தயாராகி வருகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் அறிவிக்கப்பட்டது; இப்போது இந்தியாவிற்கு வருகிறது.

எப்போது அறிமுகம்? சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இது ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில் - வருகிற ஏப்ரல் 4 அன்று மதியம் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு முக்கிய அம்சம் வெளியிடப்படும் என்று இன்ஃபினிக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. ஆக இது ஏப்ரல் 13-ல் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது.
என்னென்ன அம்சங்கள்? இன்பினிக்ஸ் நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் 'ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே' என்று அழைக்கப்படும் அம்சத்தை முன்னிலைப்படுத்தி உள்ளது தனது "லோக்கல் (இந்திய) பிரச்சாரத்தை" தொடங்கியுள்ளது. இந்த அம்சம் அடிப்படையில் கேமரா மாட்யூலில் கட்டமைக்கப்பட்ட எல்இடி-களின் தொகுப்பாகும். இது நத்திங் நிறுவனத்தின் கிளிஃப் இன்டர்பேஸ் கான்செப்ட்டை போன்றது.
ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளேவானது ஸ்மார்ட்போனின் திருப்ப வேண்டிய தேவையின்றி - நோட்டிபிகேஷன்ஸ், பேட்டரி லெவல், இன்கம்மிங் கால்கள் மற்றும் எளிய அனிமேஷன்களை கூட காட்டும். இது ஒரு பிராக்டிகல் ஆன அம்சம் என்று கூறுவதை விட விஷூவல் அம்சம் என்று கூறலாம்; ஆனால் நிச்சயமாக இது ஸ்மார்ட்போனை சற்றே தனித்துக்காட்ட உதவுகிறது.
வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போனின் பெரும்பாலான முக்கிய அம்சங்கள் உலகளாவிய வெளியீட்டின்போதே வெளியாகிவிட்டன. அதன்படி, டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5K ரெசல்யூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது 8ஜிபி அல்லது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை இது OIS உடன் கூடிய 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமராவை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 13MP செல்பீ கேமரா இருக்கும்
இந்த ஸ்மார்ட்போனின் வலுவான அம்சங்களில் ஒன்று பேட்டரி ஆகும். இதில் 6,500mAh பேட்டரி உள்ளது. இது 90W வயர்டு சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகளை ஆதரிக்கிறது. ஓஎஸ் -ஐ [பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான XOS 16 உடன் இயங்கும். கடைசியாக இது தூசி மற்றும் நீர் தெறிப்பு எதிர்ப்பிற்கான "பேஸிக்" IP64 ரேட்டிங்கை கொண்டிருக்கும்.
என்ன விலை? இந்தியாவில் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோவின் விலை ரூ.30,000 க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், நோட் 60 ப்ரோ ஒரு போட்டிதன்மை வாய்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கும்; இதன் சிறப்பம்சங்களும் வாங்குபவர்களின் எதிர்பார்ப்பை நியாயப்படுத்தும்படி இருக்கும்.
OPINION: நீங்கள் ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை தேடிக்கொண்டிருந்தால், இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ மடலுக்காக காத்திருப்பது நல்லது. இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாம் நிலை டிஸ்பிளே ஒருபக்கம் இருக்க இதன் டிஸ்பிளே, பெர்பார்மென்ஸ் மற்றும் பேட்டரி (வயர்லெஸ் சார்ஜிங்) ஆகிய அம்சங்களே இதை மற்ற போன்களிலிருந்து (இதே பட்ஜெட்டில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களில் இருந்த) தனித்து நிற்க செய்கிறது.


Click it and Unblock the Notifications








