Home
Mobile

அதிர போகுது ஆர்டர்.. 50எம்பி கேமரா.. 6500mAh பேட்டரி.. ஆஃபரில் Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ (Infinix Note 60 Pro) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அதிர போகுது ஆர்டர்.. ஆஃபரில் Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ அம்சங்கள் (Infinix NOTE 60 Pro Specifications): தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த இன்பினிக்ஸ் போனில் உள்ளது.

குறிப்பாக 6.78-இன்ச் 1.5கே கர்வ்டு அமோலெட் (curved AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2644 × 1208 பிக்சல்ஸ், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் XOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) வசதியும் இந்த போனில் உள்ளது. டீப் ஓஷன் ப்ளூ, மோக்கா பிரவுன் மற்றும் சோலார் ஆரஞ்சு நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

அதுவும் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போன் 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

இந்த இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ போனின் பின்புறம் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே வசதியும் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor)போன்ற வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

அதிர போகுது ஆர்டர்.. ஆஃபரில் Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), JBL சவுண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் மைக்ரோபோன்கள் போன்ற ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

மேலும் 6500எம்ஏஎச் பேட்டரி உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 199 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Infinix NOTE 60 Pro with 8GB RAM available at 20 percent discount on Flipkart: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X