பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. AMOLED டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
மேட்ரிக்ஸ் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வாங்க வேண்டுமானால், தள்ளுபடி விலைக்கு கிடைக்கும் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ (Infinix NOTE 60 Pro) மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம். மேட்ரிக்ஸ் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 6500mAh பேட்டரி, 90W சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை கொடுத்து இருக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 10 சதவீத தள்ளுபடியுன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.35,999 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,700 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.34,299 விலைக்கு வாங்கி கொள்ள முடியும். இப்போது பீச்சர்களை பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ அம்சங்கள் (Infinix NOTE 60 Pro Specifications): 6.78 இன்ச் (2644 x 1208 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு வருகிறது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட்டை இந்த இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ கொண்டுள்ளது. அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) கிடைக்கிறது. 3 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.
50M எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 4K 30fps வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. 13 எம்பி செல்பீ கேமராவை இந்த இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ கொண்டுள்ளது. விலாக் (Vlog), ஏஐ கேம் (AI Cam), போட்ராய்டு (Portrait), சூப்பர் நைட் (Super Night), டுயல் வீடியோ (Dual Video), ஸ்கை ப்ரோ (Sky Shop), ப்ரோ (Pro), சூப்பர் மேக்ரோ (Super Macro), ஸ்ட்ரீட் ஸ்னாப் (Street Snap) பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ மாடலில் 6500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 30W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.36 எம்எம் தடிமன் உள்ளது. 199 கிராம் எடை உள்ளது. மேலும், 3டி விசி சேம்பர் கூலிங் (3D VC Chamber Cooling) கொடுக்கப்பட்டு உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஐஆர் சென்சார் (IR Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன. ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) உள்ளன. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி, ப்ளூடூத் 5.4, வை-பை 802.11 ஏசி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications