Home
Mobile

வாடா செல்லம்.. இந்தியாவே வெயிட்டிங்.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் அடுத்து இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ (Infinix Note 60 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 6 ப்ரோ அம்சங்கள் ( Infinix Note 60 Pro specifications): 1.5கே எச்டிஆர் சினிமாடிக் டிஸ்பிளே உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. மேலும் இந்த போனின் பின்புறம் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே வசதியும் உள்ளது.

வாடா செல்லம்.. இந்தியாவே வெயிட்டிங்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட் உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் 3D ஐஸ்கோர் VC கூலிங் சிஸ்டம் ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. JBL-டியூன் செய்யப்பட்ட ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

50எம்பி ரியர் கேமராவுடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

12ஜிபி வரை ரேம் மற்றுட் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் போன் வெளிவரும். மேலும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஐபி6 ரேட்டிங், 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 6 ப்ரோ மாடல் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 60 Pro specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X