Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. வருகிறது Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ (Infinix Note 60 Pro) ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 13-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 6 ப்ரோ அம்சங்கள் ( Infinix Note 60 Pro specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட் உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

6.78-இன்ச் 1.5கே AMOLED LTPS டிஸ்பிளே உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். இதன் டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பிரைட்னஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. மேலும் இந்த போனின் பின்புறம் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே வசதியும் உள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமராவுடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

12ஜிபி வரை ரேம் மற்றுட் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் போன் வெளிவரும். மேலும்
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங், 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஐபி6 ரேட்டிங், 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. சோலார் ஆரஞ்சு, டீப் ஓஷன் ப்ளூ மற்றும் மோக்கா பிரவுன் நிறங்களில் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 6 ப்ரோ போன் வெளிவரும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 60 Pro Specifications leaked ahead of India launch on April 13: Check Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X