Home
Mobile

வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்.. Matrix டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. புது லிமிடெட் எடிஷன்!

பிரீமியம் டிசைன் மட்டுல்லாமல், மேட்ரிக்ஸ் டிஸ்பிளே, 6500mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் வெளியான இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ (Infinix NOTE 60 Pro) ஸ்மார்ட்போனின் புதிய லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பினின்ஃபரினா டிசைனில் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது.

பினின்ஃபரினா (Pininfarina) சூப்பர்கார் இன்ஸ்பயர்டு டிசைனில் இந்த புதிய லிமிடெட் எடிஷன் உருவாகி இருக்கிறது. 360 டிகிரி ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியம் ஃபிரேம் கொடுத்துள்ளது. டிசைனை தவிர மற்ற பீச்சர்களில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஆகவே, ஏற்கனவே, வெளியான இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ மாடலில் கிடைத்த பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.

வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கனும்.. Matrix டிஸ்பிளே.. எந்த மாடல்?

வருகிற ஜூன் 22ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதில் டிசைன் மற்றும் பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன. இந்த பீச்சர்கள் அப்படியே இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோவில் கிடைத்தது மட்டுமே இருக்கிறது. டிசைன் மட்டும் பினின்ஃபரினா ஸ்டைலில் இருக்கிறது. விலை விவரங்கள் வெளியாகவில்லை.

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ அம்சங்கள் (Infinix NOTE 60 Pro Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட்டை இந்த இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) கிடைக்கிறது. 3 ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. ஃபோலாக்ஸ் ஏஐ அசிஸ்டன்ட் கிடைக்கிறது. 6.78 இன்ச் (2644 x 1208 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளேவை கொடுத்துள்ளது 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் 15X டிஜிட்டல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏஐஜிசி போர்ட்ராய்டு மற்றும் டூயல் விடியோ கிடைக்கிறது.

இந்த நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போனில் 13 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த பேட்டரிக்கு 30W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. பெரிய பேட்டரி இருந்தும், 7.36 எம்எம் ஸ்லிம் பாடி கொடுக்கிறது. 199 கிராம் எடை கொடுத்துள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஜேபிஎல் சவுண்டெட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது. இந்த விலையில் பினின்ஃபரினா லிமிடெட் எடிஷன் கிடைக்குமா என்பது ஜூன் 22ஆம் தேதியே தெரியவரும். இருப்பினும், கிட்டத்தட்ட ஒரே பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix NOTE 60 Pro Pininfarina Limited Edition Launching on June 22 in India Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X