Home
Mobile

நாளை இந்தியாவில் களமிறங்கும் புது Infinix 5ஜி மாடல்.. 50MP கேமரா.. 6500mAh பேட்டரி.. எந்த போன்?

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ 5ஜி பினின்ஃபரினா லிமிடெட் எடிஷன் (Infinix Note 60 Pro 5G Pininfarina Limited Edition) நாளை (ஜூன் 24) மதியம் 12 மணி அளவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.

தரமான கார்களை வடிவமைத்த இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான 'பினின்ஃபரினா'வுடன் (Pininfarina) இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு ஸ்பெஷல் எடிஷன் தான் இந்த இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ 5ஜி பினின்ஃபரினா லிமிடெட் எடிஷன். குறிப்பாக இந்த ஸ்பெஷல் எடிஷன் ரூ.36,999 அல்லது ரூ.39,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

நாளை இந்தியாவில் களமிறங்கும் புது Infinix 5ஜி மாடல்.. எந்த போன்?

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ அம்சங்கள் (Infinix NOTE 60 Pro Specifications): 6.78-இன்ச் 1.5கே கர்வ்டு அமோலெட் (curved AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2644 × 1208 பிக்சல்ஸ், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் வசதி இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ போனில் உள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த இன்பினிக்ஸ் போனில் உள்ளது.

அதுவும் XOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) வசதியும் இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா கொண்டுள்ளது இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ போன். மேலும் இந்த போன் 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ போனின் பின்புறம் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே வசதியும் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.

நாளை இந்தியாவில் களமிறங்கும் புது Infinix 5ஜி மாடல்.. எந்த போன்?

JBL சவுண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டூயல் மைக்ரோபோன்கள் போன்ற ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

6500எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 199 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Infinix Note 60 Pro Pininfarina Edition will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X