Home
Mobile

iPhone பாதி.. Nothing பாதி.. கலந்து செய்த கலவை நான்.. அட்ரா சக்கை விலையில் புதிய Infinix 5ஜி போன்!

இன்ஃபினிக்ஸ் (Infinix) நிறுவனம் ஆனது "அங்க வச்சான் பாரு டிவிஸ்டு" என்கிற படியாக ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது. அது இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ (Infinix Note 60 Pro) ஸ்மார்ட்போன் ஆகும்.

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போனின் லேட்டஸ்ட் டீஸர் ஒன்று - அது ஆப்பிளின் சமீபத்திய மாடல்களான ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் உள்ளதை போன்ற ஒரு பெரிய "புதிய" கேமரா ஐலேண்ட்டை காட்டுகிறது. அதே சமயம் நத்திங் நிறுவனத்தின் நத்திங் போன் 3 மாடலால் ஈர்க்கப்பட்ட ஒரு டிசைன் எலிமெண்ட்டையும் கொண்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

அட்ரா சக்கை விலையில் புதிய Infinix 5ஜி போன்!

வெளியான டீஸர் போஸ்டரை பார்க்கும்போது, ​​இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸால் ஈர்க்கப்பட்டதாக தோன்றும் ஒரு தடிமனான பின்புற கேமரா ஐலேண்ட்டை கொண்டுள்ளது. ஆனால் இந்த மாட்யூலில் தனித்து நிற்பது - ஆக்டிவ் ஆக உள்ள மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே தான்.

இது கேமரா யூனிட்டுக்கு அருகில் நேரம், வானிலை, நோட்டிபிகேஷன், ம்யூசிக் கண்ட்ரோல்கள் மற்றும் சார்ஜிங் முன்னேற்றம் போன்ற தகவல்களைக் காட்டக்கூடிய ஆக்டிவ் ஆக உள்ள டாட்-மேட்ரிக்ஸ் ஸ்டைல் பேனலை போல தெரிகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் உள்ள டைனமிக் டிஸ்பிளேக்கள் - நத்திங் போன் 3 மாடலில் உள்ள கிளிஃப் இன்டர்பேஸிற்கு ஆக்கப்பூர்வமான ஆல்ட்டர்நேட்டிவ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு புதிய சோலார் ஆரஞ்சு கலர் ஆப்ஷன் ஆனது இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ மாடலுக்கு ஒரு துடிப்பான புதிய தோற்றத்தை வழங்குகிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இந்த மிட்ரேன்ஜ் ஸ்மார்போன் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரல் 4 5ஜி சிப்செட் உடன் வரும் என்பதையும் இன்பினிக்ஸ் பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த மாடல் 1.5K ரெசல்யூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான சற்றே உயரமான 6.78-இன்ச் அல்ட்ரா HDR டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் ஒரு பெரிய 6,500mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் ஒரு புதிய "பேட்டரி செல்ஃப் ஹீலிங் டெக்" ஐயும் ஆதரிக்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை இது 50MP நைட் மாஸ்டர் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. கூடவே இது JBL ஆல் டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பிரீமியம் லெதர் டெக்ஸ்ச்சர்டு பேக் பேனல், வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க 3D ஐஸ்கோர் VC வேப்பர்-சேம்பர் கூலிங் சிஸ்டம் மற்றும் பல அம்சங்களையும் கொண்டிருக்கும்

டிசைன் மற்றும் அம்சங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்க இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரங்களை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் இது விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. MWC 2026 நிகழ்வின் போது இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். விலை ரூ.25,000 - ரூ.30000 பட்ஜெட்டில் இருக்கலாம்.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் பிளெக்சிபில் AMOLED பேனலை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன் , 4500 நிட்ஸ் (HDR) மற்றும் 1600 நிட்ஸ் (HMB) வரையிலான பீக் ப்ரைட்னஸ், 1000 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங், 2160 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங், 92.89% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட 4என்எம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட பிரைம் செயல்திறன் கொண்ட குவால்காம்-ன் கிரியோ CPU கட்டமைப்பு மற்றும் அதிநவீன குவால்காம் அட்ரினோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பழைய நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இது ஜிபியு, மல்டி டாஸ்கிங், இமேஜ் ப்ராசஸிங் மற்றும் கிராபிக்ஸ் ஹேண்ட்லிங்கில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வழங்கும். சிபியு சக்தியில் 36% அதிகரிப்பு, 88% ஜிபியு மேம்படுத்தல், ஏஐ தொடர்பான பணி செயலாக்கத்தில் 60% அதிகரிப்பு என.. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மல்டி டாஸ்கிங் முதல் மிக மென்மையான மொபைல் கேமிங் வரை சிரமமில்லாத அனுபவங்களை செயல்படுத்தும்.

கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி ஓஐஎஸ் ப்ரைமரி கேமரா + 50எம்பி ஓஐஎஸ் பெரிஸ்கோப் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ட்ரூலென்ஸ்எஞ்சின் 4 மற்றும் 4கே அல்ட்ரா எக்ஸ்டிஆர் வீடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களும் உள்ளன.

பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 5500mAh சிலிக்கான் கார்பன் செல் பேக் செய்யப்பட்டுள்ளது. இது 65W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மூலம், இது வெறும் 54 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும். கூடவே இது 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 60 Pro launch Soon iPhone 17 Pro Like Camera Design Nothing Phone 3 like Active Matrix Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X