Home
Mobile

மிட்ரேன்ஜ் மிரளுது.. 12GB ரேம், 6500எம்ஏஎச் பேட்டரி, 90W சார்ஜிங், IP64 உடன் புது Infinix 5ஜி போன்!

இன்பினிக்ஸ் (Infinix) வருகிற ஜூன் 24 ஆம் தேதியன்று ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அது கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகமான இன்பினிக்ஸ் நோட் 50 போரோ 5ஜி (Infinix Note 60 Pro 5G) ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் ஆகும்.

இது இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ 5ஜி பினின்ஃபரினா லிமிடெட் எடிஷன் (Infinix Note 60 Pro 5G Pininfarina Limited Edition) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இது ஜூன் 24 ஆம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகமாகவுள்ளது. இது வெறுமனே புதிய கலரில் வரும் மற்றொரு மாடல் மட்டுமல்ல; உலகின் மிகவும் பிரபலமான பல கார்களை வடிவமைத்த இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான 'பினின்ஃபரினா'வுடன் (Pininfarina) இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு ஸ்பெஷல் எடிஷனாகும்.

12GB ரேம், 6500எம்ஏஎச் பேட்டரி, 90W சார்ஜிங்.. புது Infinix 5ஜி போன்!

இந்த வடிவமைப்பின் தனித்துவம் வெறும் பாக்ஸ்-ன் மீதான ஸ்டிக்கருடன் நின்றுவிடாமல், ஸ்மார்ட்போன் முழுவதிலும் வெளிப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் சில சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற பின்னர், இப்போது இந்திய சந்தைக்கும் வருகிறது

என்ன விலைக்கு வரும்? இதை எழுதும் நேரம் வரை, இந்த ஸ்பெஷல் எடிஷனுக்கான அதிகாரப்பூர்வ இந்திய விலையை இன்பினிக்ஸ் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் முன்னதாக வெளியான ஸ்டாண்டர்ட் மடலின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.34,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பினின்ஃபரினா எடிஷன் ஆனது 12ஜிபி ரேம்-ஐ கொண்டிருப்பதால், இதன் விலை கணிசமாக அதிகமாகவும், 'பிரீமியம் மிட்-ரேஞ்ச்' (premium mid-range) பிரிவிலும் இருக்கக்கூடும்.

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 6.78-இன்ச் 1.5கே கர்வ்டு அமோலெட் (curved AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2644 × 1208 பிக்சல்ஸ், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ 5ஜி போன் இயங்குகிறது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த இன்பினிக்ஸ் போனில் உள்ளது.

XOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) வசதியும் இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போன் 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ போனின் பின்புறம் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே வசதியும் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor)போன்ற வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

அதேபோல் JBL சவுண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டூயல் மைக்ரோபோன்கள் போன்ற ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 199 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Infinix Note 60 Pro 5G Pininfarina Limited Edition India Launch on June 24 Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X