தலைவன் வேற ரகம்.. 3D டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. 90W பாஸ்ட் சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் இன்பினிக்ஸ் நோட் 60 (Infinix NOTE 60) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ (Infinix NOTE 60 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்கள் குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 6500mAh பேட்டரி, 90W சார்ஜிங் மட்டுமல்லாமல், 3டி ஐஸ்கோர் விசி சேம்பர் கூலிங் கொடுத்துள்ளது. இந்த மாடல்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்திய மார்கெட்டில் இன்பினிக்ஸ் நோட் சீரிஸ் மாடல்களுக்கு வரவேற்பு இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகும் மாடல்கள், இந்தியாவிலும் வெளியாகும். ஆகவே, இந்த மாடல்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், இப்போதைக்கு முழு பீச்சர்கள், டிசைன் விவரங்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. விலை விவரங்கள் வெளியாகவில்லை.

இன்பினிக்ஸ் நோட் 60, நோட் 60 ப்ரோ அம்சங்கள் (Infinix NOTE 60 NOTE 60 Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultimate 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை இன்பினிக்ஸ் நோட் 60 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டை இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 6.78 இன்ச் (2644 x 1208 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுத்துள்ளது. 4K ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுத்துள்ளது. ஏஐ கேம் (AI Cam), போர்ட்ராய்டு (Portrait), சூப்பர் நைட் (Super Night), டூயல் வீடியோ (Dual Video) பீச்சர்கள் உள்ளது.
மேலும், ஸ்கை ஷாப் (Sky Shop), சூப்பர் மேக்ரோ (Super Macro) மற்றும் ஸ்ட்ரீட் ஸ்னாப் (Street Snap) கொடுக்கப்பட்டு உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரியை இன்பினிக்ஸ் நோட் 60 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரியை இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
30W வயர்லெஸ் சார்ஜிங், 5W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 3டி ஐஸ்கோர் விசி சேம்பர் கூலிங் (3D IceCore VC Chamber Cooling) கிடைத்துள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஜேபிஎல் சவுண்டெட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் கொண்டுள்ளது. குளோபல் மார்கெட்டின் வெப்சைட்டில் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. விலை விவரங்கள், விற்பனை விவரங்கள் வெளியாகவில்லை. ஓரிரு வாரங்களில் இந்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








