Home
Mobile

மூன்று கேமராக்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான இன்பினிக்ஸ் நோட் 6.!

இன்பினிக்ஸ் நிறுவனம் ஆப்பிரிக்க நாடுகளில் இன்று மூன்று கேமராக்களுடன் பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் நோட்6 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

மூன்று கேமராக்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான இன்பினிக்ஸ் நோட் 6.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.13,900-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான டிஸ்பிளே:

அசத்தலான டிஸ்பிளே:

இன்பினிக்ஸ் நோட் 6 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.01-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு
1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட சிப்செட்:

எதிர்பார்க்கப்பட்ட சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடலில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி35 ஆக்டோ-கோர் எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு பை சார்ந்த இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அட்டகாசமான கேமரா வசதி:

அட்டகாசமான கேமரா வசதி:

இன்பினிக்ஸ் நோட் 6 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி கேமரா + 2எம்பி சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்பினிக்ஸ் நோட் 6 சேமிப்பு:

இன்பினிக்ஸ் நோட் 6 சேமிப்பு:

இன்பினிக்ஸ் நோட் 6 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி
நீட்டிப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

இன்பினிக்ஸ் நோட் 6 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Infinix Note 6 With Triple Rear Cameras Launched price specs: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X