Home
Mobile

ஆல் இந்தியன்ஸ் ஆர்டர் போட ரெடியா.. ரூ.12000 க்கு 5ஜி, 5500mAh பேட்டரி, ஆக்டிவ் ஹாலோ லைட்டிங்.. எந்த மாடல்?

அப்பாடா ஒரு வழியாக இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் வருகிற மார்ச் 27 ஆம் தேதி அன்று நடக்கும் என்று இன்பினிக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி (Infinix Note 50x 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். மார்ச் 27 அறிமுகத்திற்கு முன்னதாக, இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எந்த பட்ஜெட்டிற்குள் இருக்கும்? இது என்ன முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும் என்கிற பல விவரங்களை வெளிப்படுத்தி உள்ளது.

ரூ.12000 க்கு 5ஜி, 5500mAh பேட்டரி, ஆக்டிவ் ஹாலோ லைட்டிங்!

இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் (Infinix Note 50x 5G Specifications)? இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது மாலி-ஜி615 எம்சி2 ஜிபியுவுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் (MediaTek Dimensity 7300 Ultimate) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Take a Poll

இந்த சிப்செட் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) அல்லது லாவா அக்னி 3 (Lava Agni 3) போன்ற "சாதாரண" டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300) உடன் வரும் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது எவ்வாறு "அல்டிமேட்" ஆக இருக்கும் என்பதை பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த ஸ்மார்ட்போன் 90FPS கேம்ப்ளேவை ஆதரிக்கும் மற்றும் தாமதமில்லாத கேமிங் அனுபவத்தை வழங்கும் என்று இன்பினிக்ஸ் உறுதியளித்துள்ளது. மேலும் இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரிக்கு திடமான அப்கிரேட்-ஐ வழங்கியுள்ளது; பழைய மாடலில் உள்ள 5,000mAh உடன் ஒப்பிடும்போது இந்த புதிய மாடல் 5,500mAh பேட்டரியை பேக் செய்கிறது.

ஆனால் சார்ஜிங் ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை - இது 45W உடன் தான் வருகிறது. ஆனால் சுவாரசியமாக இன்பினிக்ஸ் நிறுவனம் ரீடெயில் பாக்ஸ் உள்ளே அடாப்டரை பேக் செய்கிறது. எல்லாவற்றை விட முக்கியமான இந்த ஸ்மார்ட்போன் 10W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவையும் (Reverse Wired Charging Support) கொண்டிருக்கும்.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் முன்னோடியிலிருந்து நிறைய உத்வேகம் பெறுகிறது, இன்பினிக்ஸ் சிக்னேச்சர் கேமரா யூனிட் மற்றும் ஆக்டிவ் ஹாலோ லைட்டிங் (Active Halo Lighting) - கேமரா ஃபிளாஷ் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் வருகிறது. ஹாலோ லைட்டிங் ஆனது நோட்டிபிகேஷன் லைட் ஆகவும் வேலை செய்யும்

மேலும் இன்பினிக்ஸ் வெளியிட்டுள்ள டீஸர் புகைப்படங்களில், இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சிறிய பெசல்கள் மற்றும் டிஸ்பிளேவின் கீழே கணிசமான 'சின்' (கன்னத்துடன்) வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டூரபிலிட்டி குறித்து இன்ஃபினிக்ஸ் உயர்ந்த கூற்றுக்களை வெளியிட்டுள்ளது மற்றும் இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது MIL-STD 810H சான்றிதழை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும் (Infinix Note 50x 5G Price in India)? இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சீ ப்ரீஸ் கிரீன், என்சான்டட் பர்பிள் மற்றும் டைட்டானியம் கிரே ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

குறிப்பாக சீ ப்ரீஸ் கிரீன் வேரியண்ட் ஆனது வீகன் லெதர் பேக்குடன் வரும், மற்ற வகைகள் பாலிகார்பனேட் பினிஷை பெறும். இந்திய சந்தையில் இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,000 க்கும் குறைவான விலைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்பதை இன்பினிக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 50x 5G with Dimensity 7300 Ultimate SoC Priced Under Rs 12000 India Launch on March 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X