Home
Mobile

ஒத்த போனுக்கு மொத்த ஆர்டர்.. வெறும் ரூ.10,499 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. 12GB ரேம்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி (Infinix Note 50x 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதுவரை கிடைக்காத விலைக்கு 5500mAh பேட்டரி, 50 எம்பி மெயின் கேமரா, 12 ஜிபி ரேம், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் கிடைக்கிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி பிளிப்கார்ட் விலை (Infinix Note 50x 5G Flipkart Price): இந்த இன்பினிக்ஸ் போனின் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.11,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,000 டிஸ்கவுண்ட் போக வாங்க கிடைக்கிறது.

ஒத்த போனுக்கு மொத்த ஆர்டர்.. ரூ.10,499 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி போன்!

ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு அல்லது ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் இந்த டிஸ்கவுண்ட்டை பெற்று கொள்ளலாம். ஆகவே, 6 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.10,499 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.11,999 பட்ஜெட்டிலும் வாங்கி கொள்ளலாம். இந்த நோட் 50எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,850 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுக்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 50x 5G Specifications): இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultimate 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) கிடைக்கிறது.

2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. அதேபோல இந்த எக்ஸ்ஓஎஸ் 15 மூலம் ப்ளோட்டிங் விண்டோ (Floating Window), டைனாமிக் பார் (Dynamic Bar), கேம் மோட் (Game Mode) மற்றும் கிட்ஸ் மோட் (Kids Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

இதுபோக ஃபோளக்ஸ் ஸ்மார்ட் அசிஸ்டன்ட் (Folax Smart Assistant) கிடைக்கிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கிடைக்கிறது. இதில் 4K வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், ஏஐ பீச்சர்களும் கிடைக்கின்றன. ஆகவே, ஏஐஜிசி போர்ட்ராய்டு மோட் (AIGC Portrait Mode) உள்ளது.

இதுபோக ஏஐ வால்பேப்பர் ஜெனரேட்டர் (AI Wallpaper Generator), ஏஐ கேலரி (AI Gallery), ஏஐ எரைசர் (AI Eraser) மற்றும் ஏஐ கட்-அவுட் (AI Cut-out) போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த கேமரா பீச்சர்கள் போக ரைட்டிங் அசிஸ்டன்ட் (Writing Assistant), டாகுமென்ட் அசிஸ்டன்ட் (Document Assistant) மற்றும் கால் அசிஸ்டன்ட் (Call Assistant) போன்ற பீச்சர்கள் உள்ளன.

6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 672 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி உள்ளது. MIL-STD-810H மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 50x 5G With 6GB RAM Available At Discounted Price in Flipkart Offer Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X