Home
Mobile

பொளந்து கட்டுது விற்பனை.. ரூ.10,499 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. 50MP கேமரா.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட் விலையில் 12 ஜிபி ரேம், 5500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் வெளியான இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி (Infinix Note 50x 5G) போன் ஆர்டருக்கு கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால் பேங்க் டிஸ்கவுண்ட் போக அடிமட்ட விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Infinix Note 50x 5G Flipkart Sale): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.11,499ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

பொளந்து கட்டுது விற்பனை.. ரூ.10,499 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி மாடல்!

ஆகவே, ரூ.10,499 ஆரம்ப விலையில் இந்த இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் பெறுவதற்கு ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தலாம். டைட்டானியம் கிரே (Titanium Grey), சீ பிரீஸ் கிரீன் (Sea Breeze Green) மற்றும் என்சான்டட் பர்பிள் (Enchanted Purple) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 50x 5G Specifications): இந்த போனில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 672 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 90எப்பிஎஸ் கேமிங் மோட் கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு வெட் டச் (Wet Touch) மற்றும் கிரீஸி டச் (Greasy Touch) சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு எக்ஸஓஎஸ் 15 (XOS 15) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் 4என்எஎம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultimate 4nm) சிப்செட் வருகிறது.

2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். 50 எம்பி மெயின் கேமரா (பிடிஏஎப் போகஸ்) மற்றும் செகண்டரி கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. மெயின் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் செல்பீ ஷூட்டரில் 2K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.

மேலும், ஏஐ கேம் (AI Cam), போர்ட்ராய்டு (Portrait), சூப்பர் நைட் (Super Night), டூயல் வீடியோ (Dual Video) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுபோக இன்பினிக்ஸ் ஏஐ (Infinix AI) பீச்சர்கள் இருக்கின்றன. ஆகவே, ஏஐ வால்பேப்பர் ஜெனரேட்டர் (AI Wallpaper Generator) மற்றும் ஏஐ ஆப்ஜெக்ட் எரைசர் (AI Object Eraser) கிடைக்கின்றன.

மேலும், ஏஐ இமேஜ் கட்அவுட் (AI Image Cutout) பீச்சர் வருகிறது. மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இது இருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி போனுக்கு IP64 ரேட்டிங்கில் ஸ்பிளாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதுபோக MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது.

ரூ.10,499 பட்ஜெட்டில் எதிர்பார்க்காத பேக்கப் கொடுக்கும்படி 5500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டுக்கு மேற்கண்ட பீச்சர்கள் பக்காவாகவே இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 50x 5G With 50MP Camera Sale Under Rs 11000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X