Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.10,499 போதும்.. 12GB ரேம்.. 5500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டே மிரளும்படியான பட்ஜெட்டில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 50 எம்பி டூயல் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, ஆக்டிவ் ஹாலோ லைட்னிங் போன்ற பாடி டிசைனில் இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி பிளஸ் (Infinix Note 50x 5G+) களமிறங்கி இருக்கிறது. ரூ.10,499 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கும் இந்த இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி பிளஸ் போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்காதபடி வேகன் லெதர் பேனல் மற்றும் மெட்டாலிக் பினிஷிங் கொண்ட பாடி, ஆக்டிவ் ஹாலோ லைட்டினிங் மற்றும் ஜெம்-கட் டிசைன் கொண்ட கேமரா சிஸ்டம், IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுபோக டிஸ்பிளே, கேமரா, பேட்டரி பீச்சர்களும் மிரளவிடுகின்றன.

யாரு சாமி அவன்.. ரூ.10,499 போதும்.. 12GB ரேம்.. 5500mAh பேட்டரி மாடல்!

இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி பிளஸ் அம்சங்கள் (Infinix Note 50x 5G+ Specifications): இந்த இன்பினிக்ஸ் போனில் 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. எக்ஸஓஎஸ் 15 (XOS 15) மற்றும் இன்பினிக்ஸ் ஏஐ (Infinix AI) பீச்சர்களை பேக் செய்துள்ளது.

மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் 4என்எஎம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultimate 4nm) கிடைக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல், உலக ஸ்மார்ட்போன் மார்கெட்டிலேயே டைமன்சிட்டி 7300 அல்டிமேட் 4என்எஎம் சிப்செட் கொண்ட மாடல் இதுவாகும்.

இன்பினிக்ஸ் நிறுவனம் இதை உறுதிபடுத்தி இருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் கேமிங் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த போன் பக்கா ஆப்ஷாக இருக்கும். ஏனென்றால், சிப்செட் மட்டுமல்லாமல், 90FPS கேமிங் அவுட்புட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது.

யாரு சாமி அவன்.. ரூ.10,499 போதும்.. 12GB ரேம்.. 5500mAh பேட்டரி மாடல்!

இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 672 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி பிளஸ் போனில் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.

ஜெம்-கட் டிசைனில் 50 எம்பி டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் 8 எம்பி செல்பீ கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங், ஏஐ வால்பேப்பர் ஜெனரேட்டர் (AI Wallpaper Generator), ஏஐ ஆப்ஜெக்ட் எரைசர் (AI Object Eraser), ஏஐ இமேஜ் கட்அவுட் (AI Image Cutout) கேமரா பீச்சர்கள் வருகின்றன. ஆக்டிவ் ஹாலோ லைட்னிங் (Active Halo Lighting) உள்ளது.

இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மற்றும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) மற்றும் 5500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வருகிறது.

Take a Poll

இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆகவும் இருக்கிறது. ரூ.1,000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு வர இருக்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) வாங்கி கொள்ளலாம். மூன்று கலர்கள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 50x 5G With 50MP Camera Launched Sale From April 3 in Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X