இந்திய மார்கெட் மிரளுது.. ரூ.12,000 பட்ஜெட்ல 5500mAh பேட்டரி.. BYBASS சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே மிரளும்படியான பட்ஜெட்டில் 5500mAh பேட்டரி மட்டுமல்லாமல், அதற்கு பைபாஸ் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களையும் கொடுக்கும்படி இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி (Infinix Note 50X 5G) வெளியாக இருக்கிறது. இதுபோக 50 எம்பி மெயின் கேமரா, மிலிட்டரி கிரேடு புரொடெக்சன், இனிபினிக்ஸ் ஏஐ, IP64 ரெசிஸ்டன்ட் போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களும் கிடைக்கின்றன. இந்த இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி போனின் முழு விவரங்கள் இதோ.
இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 50X 5G Specifications): இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூஃப் (Splash Proof) கொண்ட 6.67 இன்ச் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டிடிஎஸ் சவுண்ட் (DTS Sound) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்கின்றன.

50 எம்பி டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) + செகண்டரி கேமரா கிடைக்கிறது. டூயல் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இன்பினிக்ஸ் ஏஐ (Infinix AI) கேமரா பீச்சர்கள் இருக்கின்றன. ஆகவே, ஏஐ ஆப்ஜெக்ட் எரைசர் (AI Object Eraser) மற்றும் ஏஐ இமேஜ் கட்அவுட் (AI Image Cutout) பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த நோட் 50எக்ஸ் 5ஜி போனில் 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் + 3 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது. இதனுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) கிடைக்கிறது. இந்த எக்ஸ்ஓஎஸ் 15 மூலம் டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் மட்டுமல்லாமல், கால் அசிஸ்டன்ட் (Call Assistant), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle To Search) பீச்சர்கள் வருகிறது.
மேலும், ஏஐஜிசி போர்ட்ராய்டு மோட் (AIGC Portrait Mode), ஏஐ நோட் (AI Note), ஏஐ வால்பேப்பர் ஜெனரேட்டர் (AI Wallpaper Generator), ஃபோலக்ஸ் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (Folax AI Voice Assistant) போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. பேட்டரியில் வழக்கம் போல பின்னிப்பெடல் எடுத்துள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் பீச்சர்கள் வருகின்றன.
ஆகவே, ஏஐ சார்ஜிங் புரொடெக்சன் (AI Charging Protection), ஃபைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) மற்றும் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் (Wired Reverse Charging) கிடைக்கிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி போனில் எம்ஐஎல்-எஸ்டிடி 810எச் (MIL-STD 810H) மிலிட்டரி கிரேடு புரொடெக்சன் கிடைக்கிறது. இதுபோக IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் இந்த போனில் வருகிறது.
கேமிங் பிரியர்களுக்கு மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் (MediaTek Dimensity 7300 Ultimate) சிப்செட் கிடைக்கிறது. அதேபோல மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 90எப்பிஎஸ் கேமிங் அவுட்புட் இந்த போனில் எதிர்பார்க்கலாம். மார்ச் 27ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது.
வேகன் லெதர் பினிஷிங் மற்றும் மெட்டாலிக் பினிஷிங் கொண்ட என்சேஞ்ச்டு பர்பிள் (Enchanted Purple), சீ பிரீஸ் கிரீன் (Sea Breeze Green) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இவ்வளவு பீச்சர்களை கொண்ட இந்த இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி போனின் விலை ரூ.12,000 பட்ஜெட்டில் இருக்கப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








