மார்ச் 27 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புதிய இன்பினிக்ஸ் 5ஜி போன்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி (Infinix Note 50X 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய இன்பினிக்ஸ் போன் வரும் மார்ச் 27-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும்.
அதுவும் இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி போனில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் ஆக்டிவ் ஹாலோ லைட் அம்சத்துடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது, விரைவில் இந்த இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே வெளியான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி அம்சங்கள் (Infinix Smart 9 HD Specifications): தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி50 (MediaTek Helio G50) சிப்செட் உடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go edition) இந்த புதிய இன்பினிக்ஸ் போன் வெளிவந்துள்ளது.
6.7-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. மேலும் பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 13எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதியும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மர்ரட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), IP54 தர ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (IP54 splash resistance), 4ஜி, டூயல் சிம், வைஃபை,புளூடூத், யுஎஸ்பி டைப்-சி, 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், டிடிஎஸ்-ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி ஸ்மார்ட்போனில் உள்ளன.
பின்பு மின்ட் கிரீன் (Mint Green), கோரல் கோல்டு (Coral Gold), மெட்டாலிக் பிளாக் (Metalic Black), நியோ டைட்டானியம் (Neo Titanium) நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. 3ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி போனின் விலை ரூ.6999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








