Home
Mobile

மட்ட ரேட்ல இப்படிவொரு 5G போனா.. ரூ.12000 க்கு ரூ.5500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி (Infinix Note 50x 5G) ஸ்மார்ட்போன் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் இப்படிவொரு டிசைனை கொடுப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நோட் 50எக்ஸ் 5ஜி போனுக்கு கொடுக்கப்பட்ட தள்ளுபடி விவரங்கள் மற்றும் அம்சங்களை பார்க்கலாம்.

பிளிப்கார்ட் சூப்பர் காயின் டீலில் (Flipkart Super Coin Deal) 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் 16 சதவீத தள்ளுபடி போக ரூ.12,499 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.635 மதிப்பில் கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,847 விலையில் வாங்கி கொள்ளலாம்.

மட்ட ரேட்ல இப்படிவொரு 5G போனா.. ரூ.12000 க்கு ரூ.5500mAh பேட்டரி!

இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 50x 5G Specifications): 6.67 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவுக்கு 720 x 1600 பிக்சல்கள் கொண்ட எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 672 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. 2 ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம்.

3 வருடங்களுக்கு செக்யூரிட்ரி அப்டேட்கள் கிடைக்கும். ப்ளோட்டிங் வீண்டோ (Floating Window), டைனாமிக் பார் (Dynamic Bar), கேம் மோட் (Game Mode), கிட்ஸ் மோட் (Kids Mode) மற்றும் போலக்ஸ் ஸ்மார்ட் அசிஸ்டன்ட் (Folax Smart Assistant) கொண்ட எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) கிடைக்கிறது. மேலும், கேமரா அம்சங்கள் உள்ளன.

ஆகவே, ஏஐஜிடி போர்ட்ராய்டு மோட் (AIGC Portrait Mode), ஏஐ எரைசர் (AI Eraser) மற்றும் ஏஐ கட்-அவுட் (AI Cut-out) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமராவை இந்த இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 5500mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், ஃபைபாஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 2300 சார்ஜிங் சைக்கிள்களை இந்த பேட்டரி கொடுக்கும்.

6 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் பக்காவாக இருக்கும். இந்த விலைக்கு கிடைத்தாலும், லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கின்ற MIL-STD-810H மிலிட்டரி கிரேடு நீடிக்கும் தன்மை கிடைக்கிறது. அதேபோல IP64 ரேட்டிங்ஸ் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸை இந்த இன்பினிகஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared sensor) கிடைத்துள்ளது. அதேபோல டைப்-சி ஆடியோ கிடைக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைத்துள்ளன. சீ பிரீஸ் கிரீன் (Sea Breeze Green), டைட்டானியம் கிரே (Titanium Grey) கலர்களில் கிடைக்கிறது.

மேலும், என்சேன்டெட் பர்பிள் (Enchanted Purple) ஆகிய கலர்களில் இந்த இன்பினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது. 5ஜி, டூயல் 4ஜி, வை-பை 6 மற்றும் ப்ளூடூத் 5.3 கொடுத்துள்ளது. மேலும், ஜிபிஎஸ், குளோனாஸ் போன்ற கனெக்டிவிட்டி சப்போர்ட் கொடுத்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 50x 5G 6GB RAM 50MP camera available at a discounted price on Flipkart super coin deal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X