மார்கெட் மிரளுது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 144Hz ரெஃப்ரெஷ் ரேட்.. 4K ஷூட்டிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட் மிரளும்படி அக்வாடிக் செண்டெட் வேகன் லெதர் பேனல் மட்டுமல்லாமல், சோனி ஐஎம்எக்ஸ்682 சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் போன்ற பீச்சர்களுடன் இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி (Infinix Note 50s 5G) வெளியாக இருக்கிறது. ஏஐ கேமரா பீச்சர்கள், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி போன்ற பீச்சர்களை கொடுக்கும் இந்த இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
அக்வாடிக் செண்டெட் வேகன் லெதர் பேனல் கொண்ட முதல் போனாக இந்த இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி வெளியாக இருக்கிறது. ஏப்ரல் 18ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக டிஸ்பிளே, புரொடெக்சன், டிசைன் மற்றும் கலர் ஆகிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டன.

இப்போது, கேமரா சென்சார் விவரங்கள் உறுதியாகி இருக்கின்றன. இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் மட்டுமே இன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. ஆகவே, இந்த போனும் பட்ஜெட்டில் கிடைப்பது உறுதியாகும். இதனாலேயே அக்வாடிக் செண்டெட் பேனல், சோனி சென்சார் போன்ற பீச்சர்கள் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 50s 5G Specifications): இந்த போனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்ட 6.87 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது.
அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் ராணுவ-தர கடினத்தன்மை (Military-Grade Toughness) கிடைக்கிறது. இந்த போனில் மரைன் டிரைப்ட் ப்ளூ (Marine Drift Blue), டைட்டானியம் கிரே (Titanium Grey) மற்றும் ரூபி ரெட் (Ruby Red) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இதில் ப்ளூ வேரியண்ட்டில் வேகன்-லெதர் பேனல் மட்டுமல்லாமல், அதில் செண்ட்-டெக் சப்போர்ட் கிடைக்கிறது.
அதாவது, அக்வாடிக் செண்டெட் அவுட்புட் கொடுக்கும். இதன் மூலம் பேக் பேனலின் வாசனை பிரீமியமாக இருக்கும். ஜெம்-கட் டிசைன் மற்றும் ஆக்டிவ் ஹாலோ லைட் கொண்ட கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 64 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த இன்பினிக்ஸ் மாடல் கொடுக்கிறது.
இந்த கேமராவில் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), டூயல் வீடியோ (Dual Video), 4K வீடியோ ஷூட் போன்ற வழக்கமாக பீச்சர்கள் மட்டுமல்லாமல், இன்பினிக்ஸ் ஏஐ (Infinix AI) பீச்சர்களும் கிடைக்கின்றன. ஆகவே, ஏஐ ஆப்ஜெக்ட் எரைசர் (AI Object Eraser), ஏஐ இமேஜ் கட்அவுட் (AI Image Cutout) மற்றும் ஏஐஜிசி போர்ட்ராய்டு (AIGC Portrait) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
மேலும், போளாக்ஸ் அசிஸ்டன்ட் (Folax Assistant) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஆரம்ப மாடலாக வெளியாக வாய்ப்புள்ளது. இந்த போனின் விலை அறிமுக சலுகையுடன் ரூ.20,000 பட்ஜெட்டில் இருக்கலாம் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications