Home
Mobile

செதுக்கி இருக்காங்களே.. ரூ.14,999 பட்ஜெட்ல சோனி கேமரா.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி பிளஸ் (Infinix Note 50s 5G+) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. 64எம்பி சோனி கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், JBL ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 15 OS உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களைப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி பிளஸ் அம்சங்கள் (Infinix Note 50s 5G Plus specifications): 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளேவசதியுடன் இந்த இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass 5 protection), 2304Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (2304Hz PWM Dimming) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

செதுக்கி இருக்காங்களே.. ரூ.14,999 பட்ஜெட்ல சோனி கேமரா.. எந்த மாடல்?

ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் (Octa Core MediaTek Dimensity 7300 Ultimate)சிப்செட் உடன் இந் புதிய போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு(Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஐஆர் சென்சார் (IR sensor) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

XOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஜேபிஎல் (JBL) ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் டிடிஆர் ஆடியோ சப்போர்ட் கூட இந்த போனில் உள்ளது. டூயல் மைக்ரோபோன்கள் ஆதரவும் இந்த போனில் உள்ளன.

ஐபி54 ரேட்டிங்கையும் (Dust and Splash Resistance IP54 Rating) பெற்றுள்ளது இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி பிளஸ் போன். குறிப்பாக 5000mAh பேட்டரி உடன் இந்த புதிய இன்பினிக்ஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

64எம்பி சோனி ஐஎம்எக்ஸ்682 சென்சார் + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி பிளஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது.

செதுக்கி இருக்காங்களே.. ரூ.14,999 பட்ஜெட்ல சோனி கேமரா.. எந்த மாடல்?

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி பிளஸ் போனில் உள்ளன. மரைன் டிரிஃப்ட் ப்ளூ (Marine Drift Blue), டைட்டானியம் கிரே (Titanium Grey) மற்றும் ரூபி ரெட் (Ruby Red) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி பிளஸ் போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.17,999-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 24-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய போனை வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.14,999 விலையில் வாங்கிவிட முடியும்.

Best Mobiles in India

English summary
Infinix Note 50s 5G Plus launched in India: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X