அறிமுகமானது புது Infinix 5ஜி போன்.. சோனி கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி ( Infinix Note 50 Pro Plus 5G) ஸ்மார்ட்போன் உலக சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது 100W சார்ஜிங், சோனி கேமரா, ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 50 Pro Plus 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் குவாட் கர்வ்ட் எட்ஜ் (AMOLED curved-edge display) உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10பிளஸ், 1300 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

அதேபோல் டைமன்சிட்டி 8350 அல்டிமேட்(Dimensity 8350 Ultimate) சிப்செட் உடன் இன்பினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் XOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) ஒஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) பிரைமரி கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டெலிபோட்டோ லென்ஸ் ஆனது 6x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. மேலும் JBL டூயல் ஸ்பீக்கர்கள், x-ஆக்சிஸ் லீனியர் மோட்டார், பயோ-ஆக்டிவ் ஹாலோ AI லைட்டிங் உள்ளிட் அசத்தலான வசதிகளுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உடன் வருகிறது புதிய இன்பினிக்ஸ் போன். அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் போன்.
5200mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் Cheetah X2 பவர் மேனேஜ்மென்ட் வசதியும் உள்ளது.
வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.4, என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் டைட்டானியம் கிரே (Titanium Grey), என்சான்டட் பர்பிள் (Enchanted Purple) மற்றும் ரேசிங் எடிஷன் ( Racing Edition) உள்ளிட்ட நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் நோட் 50 ப்ரோ பிளஸ் 5ஜி போனின் விலை $370 (இந்திய மதிப்பில் ரூ.31,827) ஆக உள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








