இந்தியா: 6.0-இன்ச் டிஸ்பிளேவுடன் இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் அறிமுகம்.!
எக்ஸ் பென் ஸ்டைலஸ் பொறுத்தவரை 4096 அளவில் அழுத்தத்தை உணரும் என்றும், பின்பு மகிவும் மென்மையா நுனிப் பகுதியை கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் இன்ஃபினிக்ஸ் மொபிலிட்டி நிறுவனம் புதிய இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக எக்ஸ் பென் ஸ்டைலஸ் அம்சத்துடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

எக்ஸ் பென் ஸ்டைலஸ் பொறுத்தவரை 4096 அளவில் அழுத்தத்தை உணரும் என்றும், பின்பு மகிவும் மென்மையா நுனிப் பகுதியை கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எக்ஸ் பென் மெனு மூலம் நோட்ஸ், மெமோஸ் எழுதுவதோடு, ஸ்கிரீஷாட் எடுப்பது, ஃபைல்களை பார்ப்பது போன்றவற்றை மேற்கொள்ள முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் :
இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் சாதனம் பொதுவாக 6.0-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு மற்றும் 2160x1080 பிக்சல் திர்மானம் அடிப்பயைடலி இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி23 16என்.எம் சிப்செட், மாலி-ஜி71 எம்பி2 ஜிபியு போன்ற பல்வேறு மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி செல்பீ கேமரா மற்றும் 16எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:
இக்கருவியில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்ப கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, பின்பு கைரேகை சென்சார் போன்ற பல்வேறு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

விலை:
இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக ரூ.15,999 விலையில், பிளிப்கார்ட் தளத்தில் இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் கிடைக்கும். மேலும் ஜியோ சார்பில் ரூ.2,200 வரை உடனடி கேஷ்பேக் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications