Home
Mobile

108MP ட்ரிபிள் ரியர் கேமரா.. iPhone-ல் இருக்கும் ஸ்பெஷல் அம்சம்.. சீறி வரும் Infinix போன்.. நாள் குறிச்சாச்சு!

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் இந்தியாவில் மிகவே விரைவில் இன்பினிக்ஸ் நோட் 40X (Infinix Note 40X) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 40X ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் (Infinix Note 40X August Launch) மாத துவக்கத்தில் வெளியாகும் என்று இப்போது கூறப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய சிறப்பம்சங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரம் இதோ.

இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 40X (Infinix Note 40X) ஸ்மார்ட்போன் சாதனம் இன்பினிக்ஸ் நோட் 40 சீரிஸ் வரிசையில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் நோட் 40 சீரிஸ் வரிசையில் ஐந்தாவது மாடலாக சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 40X (Infinix Note 40X) ஸ்மார்ட்போன் சாதனம் வரும் ஆகஸ்ட் 5, 20244 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

108MP ட்ரிபிள் ரியர் கேமரா.. iPhone-ல் இருக்கும் ஸ்பெஷல் அம்சம்..

இன்பினிக்ஸ் நோட் 40X (Infinix Note 40X):
இது நேர்த்தியாக உருவாக்கப்பட்ட ஃபிளாட் ஃபிரேம் டிஸைனுடன் சதுர வடிவ கேமரா மாட்யூல் வடிவத்தை கொண்டுள்ளது. இது ஸ்டர்லைட் பிளாக் (Starlit Black), லைம் கிரீன் (Lime Green), மற்றும் பால்ம் ப்ளூ (Palm Blue) நிறங்களில் வருகிறது. இந்த சாதனம் சைட் மவுண்டட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் அம்சத்துடன் வருகிறது. இதன் பவர் பட்டன் மற்றும் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஒரே பட்டனில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 40X (Infinix Note 40X) சாதனமது 6.78" இன்ச் டிஸ்பிளே பன்ச் ஹோல் கட் அவுட் டிஸ்பிளேவுடன் டைனமிக் போர்ட் அம்சத்துடன் வருகிறது. இது ஆப்பிள் ஐபோன் சாதனங்களில் காணப்பட்ட டைனமிக் ஐலேண்ட் போன்ற தோற்றத்தை பிரதிபலிக்கிறது. இது நோட்டிபிகேஷன் டிஸ்பிளே மற்றும் சார்ஜிங் ஸ்டேட்டஸ் விபரங்களை காண்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

108MP ட்ரிபிள் ரியர் கேமராவுடன் ஒரு தரமான புது ஸ்மார்ட்போன்:
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108MP மெயின் கேமராவுடன் கூடிய ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டிருக்கும். முன்பக்கத்தில், இந்த சாதனம் 8MP செல்பி கேமராவை AI அம்சத்துடன் கொண்டிருக்கும். இன்பினிக்ஸ் நோட் 40X (Infinix Note 40X) ஸ்மார்ட்போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உடன் DTS ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இன்பினிக்ஸ் நோட் 40X (Infinix Note 40X) ஸ்மார்ட்போனின் சிப்செட், ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விபரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இது அடுத்த வாரத்தில் லீக் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பிளிக்ப்பர்ட் (Flipkart) இந்தியா தளம் வழியாக விற்பனைக்கு வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு பட்ஜெட் விருப்பமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 40X With 108MP Triple Rear Camera and Dynamic Island Display To Launch In India On August 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X