தூக்கி பாக்கெட்ல போடலாம்.. ரூ.12000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
வெறும் ரூ.12000 பட்ஜெட்டில் 108 எம்பி மெயின் கேமரா மட்டுமல்லாமல், விர்ச்சுவல் ரேம் இல்லாமலேயே 12 ஜிபி ரேம், 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, டிடிஎஸ் டூயல் ஸ்பீக்கர்கள் போன்ற பீச்சர்களை இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் (Infinix Note 40X) கொடுக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் டிஸ்கவுண்ட்டில் (Flipkart Discount) அடிமட்ட விலைக்கு விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் போனின் என்னென்ன பீச்சர்கள் இருக்கின்றன? விலை எப்படி? டிஸ்கவுண்ட் எவ்வளவு? உள்ளிட்ட விவரம் இதோ.
இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் அம்சங்கள் (Infinix Note 40X Specifications): இந்த போனில் டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சருடன் 6.78 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பேக் செய்யப்பட்டுள்ளது.

எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் போனில் பட்ஜெட்டிலும் மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது.
108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + AI லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) ஆனது குவாட் எல்இடி ஃபிளாஷ் கொண்டிருக்கிறது. 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் மட்டுமல்லாமல், 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் கிடைக்கிறது.
இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), மற்றும் டிடிஎஸ் சவுண்ட் (DTS Sound) உள்ளது. இந்த ரூ.12,000 பட்ஜெட்டுக்கு ஏற்பட IP52 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint) சென்சார், டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (SA/NSA) கனெக்டிவிட்டி வருகிறது. இந்த போனை ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black), லைம் கிரீன் (Lime Green) மற்றும் பால்ம் ப்ளூ (Palm Blue) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.
இன்பினிக்ஸ் நோட் 4எக்ஸ் பிளிப்கார்ட் விற்பனை (Infinix Note 40X Flipkart Sale): இந்திய மார்கெட்டில் 12 ஜிபி ரேம் (12 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.15,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பிளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.14,499 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் வருகிறது.
ஆகவே, ரூ.12,499 பட்ஜெட்டில் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. அதேபோல டெபிட் கார்டுக்கும் ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 டிஸ்கவுண்ட் வருகிறது. இதுபோக ரூ.10,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications