Home
Mobile

ஆர்டர் பொளக்கும்.. வெறும் ரூ.14999 போதும்.. 108MP கேமரா.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்கள் அதிரும்படியான விலையில் 24 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 108 எம்பி கேமரா, டைனாமிக் பார் பீச்சர்கள் கொண்ட ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் உடன் இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி (Infinix Note 40X 5G) மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. வெறும் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் இதுவரை கிடைக்காத பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த இன்பினிக்ஸ் போனின் முழு விவரங்கள் இதோ.

இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 40X 5G Specifications): இந்த நோட் மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ஆர்டர் பொளக்கும்.. வெறும் ரூ.14999 போதும்.. 108MP கேமரா.. 24GB ரேம்.!

இதுவொரு டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் கொண்ட பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) மாடலாகும். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது.

இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போனில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் உள்ளது. அதேபோல டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.

8 ஜிபி ரேம் மாடலில் 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் மாடலின் 12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது. ஆகவே, மலிவான விலையில் 24 ஜிபி ரேம் கொண்ட மாடலாக இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன் இருக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் உள்ளது.

ஆர்டர் பொளக்கும்.. வெறும் ரூ.14999 போதும்.. 108MP கேமரா.. 24GB ரேம்.!

ஆகவே, 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + AI லென்ஸ் வருகிறது. குவாட் எல்இடி ஃபிளாஷ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. டூயல் வீடியோ (Dual Video), ஃபிலிம் மோட் (Flim Mode), ப்ரோ மோட் (Pro Mode) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போனானது பட்ஜெட் மாடலாகும். ஆகவே, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் எதிர்பார்க்க முடியாது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint) சென்சார் வருகிறது. இருப்பினும், டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.

மேலும், டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) வருகின்றன. IP52 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த நோட் மாடலில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 8.6 எம்எம் தடிமன் மற்றும் 201 கிராம் எடை உள்ளது. மூன்று கலர்களில் ஆர்டருக்கு வர இருக்கிறது.

ஆகவே, லைம் கிரீன் (Lime Green), பால்ம் ப்ளூ (Palm Blue) மற்றும் ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்யலாம். இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆகவும் இருக்கிறது.

எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.1500 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 8 ஜிபி மாடலை ரூ.13,499-க்கு வாங்க முடியும். 12 ஜிபி மாடல் ரூ.14,999-க்கு கிடைக்கிறது. ஆகஸ்ட் 9ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 40X 5G With108MP Camera Launched Sale From August 9 in Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X