Home
Mobile

பட்ஜெட் விலை.. 108எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40X 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் அறிமுகமாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 40X 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்(MediaTek Dimensity 6300 chipset) உடன் இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

பட்ஜெட் விலை.. 108எம்பி கேமரா..வருகிறது Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

குறிப்பாக 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (18W fast charging) வசதியும் உள்ளது.

பட்ஜெட் விலை.. 108எம்பி கேமரா..வருகிறது Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

5ஜி (5G), 4ஜி எல்டிஇ (4G LTE), டூயல் பேண்ட் வைஃபை (dual-band Wi-Fi), புளூடூத் (Bluetooth), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போனில் உள்ளன. இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உடன் இந்த புதிய இன்பினிக்ஸ போன் வெளிவரும்.

மேலும் இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்களும் உள்ளது. குறிப்பாக இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி ஸ்மாரட்போன் ஆனது இந்தியாவில் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo courtesy: infinix

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 40X 5G Price Teased in India: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X