தலைவன் எப்போதும் தனி ரகம்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது புதிய Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?
சில வாரங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40X 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். அதாவது இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி எனும் போனை தான் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. வரும் வாரங்களில் இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ட்ரிபிள் ரியர் கேமராக்கள், டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 40X 5G Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்இ 1000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) உடன் இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி வெளிவரும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன். எனவே இந்த சாதனத்தை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (18W fast charging) வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி (5G), 4ஜி எல்டிஇ (4G LTE), டூயல் பேண்ட் வைஃபை (dual-band Wi-Fi), புளூடூத் (Bluetooth), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.10000 அல்லது 12,000 பட்ஜெட்டில் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo courtesy: passionategeekz.com, 91mobiles, infinix


Click it and Unblock the Notifications








