Home
Mobile

வெளுத்து கட்ட போகுது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் பிரியர்களை தட்டித்தூக்கும் பட்ஜெட்டில் ஆக்டிவ் ஹாலோ டிசைன் மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் கொண்ட 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சூப்பர் ஜூமிங் சப்போர்ட் கொண்ட 108 எம்பி கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 20W வயர்லெஸ் சார்ஜிங், ஜேபிஎல் பில்ட் டூயல் ஸ்பீச்சர்கள் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் இன்பினிக்ஸ் நோட் 40எஸ் (Infinix Note 40S) போன் வெளியாக இருக்கிறது. இப்போது, அதிகாரப்பூர்வமாக பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த முழு விவரம் இதோ.

இந்திய மார்கெட்டில் ஜூன் 21ஆம் தேதி இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போன் வெளியாகியது. வெறும் ரூ.19,999 பட்ஜெட்டில் 108 எம்பி ஓஐஎஸ் கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, வயர்ஸெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh போன்ற பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுத்தது. இப்போது, அதைவிட கம்மி பட்ஜெட்டில் அடுத்த வேரியண்ட் களமிறங்க இருக்கிறது.

வெளுத்து கட்ட போகுது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 16GB ரேம்!

இன்பினிக்ஸ் நோட் 40எஸ் அம்சங்கள் (Infinix Note 40S Specifications): இந்த நோட் மாடலில் 6.78 இன்ச் (1080 x 2436 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட எல்டிபிஎஸ் (LTPS) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2160HZ PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

மேலும், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) புரொடெக்சன் கொண்டிருக்கிறது. எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 அல்டிமெட் (Octa-core MediaTek Helio G99 Ultimate) சிப்செட் வருகிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

பட்ஜெட் பிரியர்களுக்கான மீடியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி57 எம்சி 2 (Mali G57 MC 2) சிப்செட் வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ மற்றும் டெப்த் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த மெயின் கேமராவில் லாஸ்லெஸ் 3X சூப்பர்ஜூம் (Lossless 3X Superzoom) சப்போர்ட் வருகிறது.

வெளுத்து கட்ட போகுது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 16GB ரேம்!

அதேபோல 2K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஃபிலிம் (FILM), போர்ட்ராய்டு (PORTRAIT), சூப்பர் நைட் (SUPER NIGHT), டூயல் வீடியோ (DUAL VIDEO), ஸ்கை ஷாப் (SKY SHOP) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. இந்த டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டமானது, ஆக்டிவ் ஹாலோ டிசைனில் (Active Halo Design) ரிங் எல்இடி கொண்டிருக்கிறது.

இந்த நோட் மாடலில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனில் 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 20W வயர்லெஸ் மேக் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி போர்ட் சப்போர்ட் உள்ளது.

IP54 ஸ்பிளாஷ், வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. டைப்-சி (TYPE-C) இயர்போன் ஜாக், டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மற்றும் ஜேபிஎல் (JBL) பில்ட் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் வருகிறது. இந்த போனுக்கு 2 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் 36 மாத செக்யூரிட்டி அப்கிரேட் வருகிறது.

இந்த இன்பினிக்ஸ் நோட் 40எஸ் 4ஜி மாடலாகும். ஆகவே, முன்னதாக வெளியான 5ஜி மாடலைவிட கம்மியான விலைக்கே வெளியாகும் என்பதில் சந்தேமில்லை. ரூ.15,000 முதல் ரூ.17,000 பட்ஜெட்டுக்குள் இந்த போனின் விலை நிர்ணயம் இருக்க வாய்ப்புள்ளது. மேற்கூறிய பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக இன்பினிக்ஸ் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, அடுத்த நாட்களில் போன் வெளியாகலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 40S 4G With 108MP Camera, Full Specifications Officially Confirmed Check Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X