ஆக.26 முதல் ஆர்டர் அள்ளப்போகுது.. நினைச்சு பார்க்காத விலைக்கு Infinix Note 40 Series Racing Edition அறிமுகம்!
மெதுவாக ஆனால் மிகவும் பலமாக.. இந்தியர்களின் நம்பிக்கையை பெற்று வரும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபினிக்ஸ், அதன் இன்பினிக்ஸ் நோட் 40 சீரிஸ் ரேசிங் எடிஷனை (Infinix Note 40 Series Racing Edition) இன்று (ஆகஸ்ட் 24 ஆம் தேதி) இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் அதன் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ (Infinix Note 40 Pro) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் (Infinix Note 40 Pro Plus) மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது.
இன்று அறிமுகமான புதிய மாடல்கள் BMW-இன் டிசைன்வொர்க்ஸுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட F1 ஆல் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பை கொண்டுள்ளன. அதாவது புதிய மாடல்கள் ஆனது முன்னதாக அறிமுகமான ஒரிஜினல் மாடல்களில் உள்ள அதே அம்சங்களை தான் கொண்டிருக்கும். ஆனால் வேறுபட்ட வடிவமைப்பை பெற்றிருக்கும். புதிய மாடல்களின் விலை நிர்ணயம் என்ன? இவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்கின்றன? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ விவரங்கள்:

இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ மற்றும் நோட் 40 ப்ரோ பிளஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி இவ்விரு ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன்களுமே இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ மற்றும் நோட் 40 ப்ரோ பிளஸ் மாடல்களில் உள்ள அதே அம்சங்களைத்தான் கொண்டுள்ளன.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, இரண்டுமே 1080 x 2436 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் கர்வ்டு எல்டிபிஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன. மேலும் இரண்டுமே அதிகபட்சம் 12ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimensity 7200 SoC) உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டுமே மாடல்களும் விசி கூலிங் டெக்னாலஜி 2.0-ஐ கொண்டுள்ளன, இது 11 அடுக்குகள் கொண்ட வெப்பச் சிதறல் பொருட்களுடன் மேம்படுத்தப்பட்ட வெப்ப மேலாண்மையை வழங்குவதாக கூறப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடனான இரண்டு குறிப்பிடப்படாத 2 மெகாபிக்சல் சென்சார்கள் உள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
இரண்டு ஸ்மார்ட்போன்களுமே JBL ஆல் டியூன் செய்யப்பட்ட டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. மேலும் இரண்டுமே 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றிற்கான ஆதரவை வழங்குகின்றன. மேலும் இரண்டு மாடல்களும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP53 மதிப்பீட்டை கொண்டுள்ளன.
முக்கிய வேறுபாட்டினை பொறுத்தவரை இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது, அதே சமயம் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இருப்பினும் இரண்டு மாடல்களும் பவர் மேனேஜ்மென்ட்டுக்காக ஒரே இன்-ஹவுஸ் சீட்டா எக்ஸ்1 சிப்பை (Cheetah X1 chip) கொண்டுள்ளன. மேலும் இரண்டு மாடல்களும் 20W வயர்லெஸ் சார்ஜிங்கை (Wireless Charging) ஆதரிக்கின்றன மற்றும் அங்கீகரிப்புக்காக இன்-டிஸ்பி ளே பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளன.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ மற்றும் நோட் 40 ப்ரோ பிளஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விலைகள் அசல் விலை நிர்ணயங்கள் அல்ல. இது வங்கி தள்ளுபடிகளை உட்படுத்திய ஆபர் விலையாகும். இவ்விரு ஸ்மார்ட்போன்களின் ஓடிஜினல் ப்ரைஸ் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ ரேசிங் எடிஷன் மற்றும் நோட் 40 ப்ரோ பிளஸ் ரேசிங் எடிஷன் ஆகிய இரண்டுமே வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்!


Click it and Unblock the Notifications








