ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.21475 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 108MP கேமரா.. 70W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய பட்ஜெட் பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போடும்படியான பட்ஜெட்டில் 108எம்பி கேமரா, 70W சார்ஜிங், 3டி அமோலெட் டிஸ்பிளே, 16ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ (Infinix Note 40 Pro) போன் களமிறங்கி இருக்கிறது.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ அம்சங்கள் (Infinix Note 40 Pro Specifications): இந்த போனில் ஆக்டா பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட லேட்டஸ்ட் சிப்செட்டான கோர் மீடியாடெக் டைமன்சிட்டி ஹீலியோ ஜி99 அல்டிமேட் 6என்எம் (Octa Core MediaTek Helio G99 Ultimate 6nm) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 (Arm Mali-G57 MC2) கிராபிக்ஸ் வருகிறது.

எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) கொண்டுள்ளது. 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் + 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது. அதேபோல 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் + 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 1 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு பயன்படுத்தலாம்.
இந்த போனில் 6.78 இன்ச் (2436 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவானது, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) பேனல் கொண்டிருக்கிறது. 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.
மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) புரொடெக்சன் கொண்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ மாடலில் ஓஐஎஸ் (OIS) மற்றும் ஏஎப் (AF) சப்போர்ட் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, 2K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உடன் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ + 2 எம்பி டெப்த் கேமரா கொண்டிருக்கிறது.

இந்த கேமராவில் சூப்பர் நைட் (Super Night), போர்ட்ராய்டு (Portrait), ஏஆர் ஸ்பேஸ் (AR Space), சூப்பர் மேக்ரோ (Super Macro) மற்றும் டூயல் வீடியோ (Dual Video) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஃபாஸ்ட்சார்ஜ் 2.0 (FastCharge2.0) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
ஆகவே, 70W சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 20W வயர்லெஸ் மேக்சார்ஜ் (Wireless MagCharge) சப்போர்ட் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஐஆர் சென்சார் (IR Sensor) வருகிறது. ஜேபிஎல் (JBL) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், டூயல் மைக்ரோபோன் (Dual Microphone) வருகிறது. இந்த நோட் 40 ப்ரோ போனில் IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்லிம் டிசைனில் 7.75 மிமீ தடிமன், 190 கிராம் எடை கொண்டிருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் கொண்டுள்ளது.
வின்டேஜ் கிரீன் மற்றும் டைட்டன் கோல்டு ஆகிய 2 கலர்கள் கொண்டிருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ போனின் ஆரம்ப விலை ரூ.21,475ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, குளோபல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








