Home
Mobile

விஸ்வரூப மாடல்.. ரூ.25000 போதும்.. 100W சார்ஜிங்.. 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. JBL ஸ்பீக்கர்.. எந்த போன்?

ஒட்டுமொத்த மிட்-ரேஞ்ச் போன்களையும் தூக்கிசாப்பிடும் விதமாக பட்ஜெட்டில் கர்வ்ட் டிஸ்பிளே, 108எம்பி கேமரா, 100W சார்ஜிங், 20W வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி சீரிஸ் (Infinix Note 40 Pro 5G Series) வெளியாகியிருக்கிறது.

இதில் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி (Infinix Note 40 Pro 5G) மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி (Infinix Note 40 Pro Plus 5G) ஆகிய மாடல்கள் இருக்கின்றன. முதலில் குளோபல் வெளியீடு நடந்து முடிந்துள்ளது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம்.

ரூ.25000 போதும்.. 100W சார்ஜிங்.. 108MP கேமரா.. 3D டிஸ்பிளே மாடல்!

இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி, ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 40 Pro 5G, Pro Plus 5G Specifications): இந்த போன்கள் பட்ஜெட்டிலும் மிட்-பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், புது டெக்னாலஜிகளையும் கொண்டிருக்கிறது. ஆக்டிவ் ஹாலோ ஏஐ லைட்னிங் (Active Halo AI Lighting), ஜேபிஎல் (JBL) சவுண்ட் மற்றும் ஸ்பீக்கர்கள் வருகிறது.

6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே மாடலாகும். ஆகவே, டிஸ்பிளே அனுபவம் பிரீமியமாக இருக்கும். அதே நேரத்தில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருவதால், அவுட்புட் பக்காவாக இருக்கும்.

கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வருகிறது. நல்ல பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7020 6nm) சிப்செட் வருகிறது. அதேபோல கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM-8-256 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

ரூ.25000 போதும்.. 100W சார்ஜிங்.. 108MP கேமரா.. 3D டிஸ்பிளே மாடல்!

இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. அதுவே இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சப்போர்ட் உள்ளது. இந்த வேரியண்ட்டிகளில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உள்ளது.

அதோடு எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 108 எம்பி மெயின் கேமரா (OIS) + 2 எம்பி மேக்ரோ கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 2K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, கேமராவிலும் பக்கா அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

ஐஆர் சென்சார் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் கொண்டிருக்கிறது. IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. ப்ரோ பிளஸ் போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4500mAh பேட்டரி வருகிறது.

ரூ.25000 போதும்.. 100W சார்ஜிங்.. 108MP கேமரா.. 3D டிஸ்பிளே மாடல்!

ப்ரோ மாடலில் 5000mAh மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. இரண்டு மாடல்களிலும் 20W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. லெதர் பேனல் கொண்ட வின்டேஜ் கிரீன் (Vintage Green) மற்றும் கிளாஸ் பேனல் கொண்ட அப்சிடியன் பிளாக் (Obsidian Black), டைட்டன் கோல்டு (Titan Gold) ஆகிய கலர்களில் வெளியாகி இருக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,960 ஆகவும், நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,620ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையிலேயே இந்தியா உள்பட மற்ற நாடுகளிலும் வெளியாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 40 Pro Plus 5G With 108MP Camera, 100W Charging Announced Globally Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X