ஆர்டர் அள்ள போகுது.. 108எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனத்தின் போன்கள் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி (Infinix Note 40 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.17,999 விலையில் வாங்கிவிட முடியும்.

இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Infinix Note 40 Pro 5G specifications): ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் பிராசஸர் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் XOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது.
ஹாலோ ஏஐ லைட்னிங் (Active Halo AI Lighting) எனும் புதிய தொழில்நுட்ப வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் ஜேபிஎல் சவுண்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போன். அதேபோல் ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் 2.0 (All-Round FastCharge2.0) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
Cheetah X1 சிப் மூலம் இந்த போன் இயக்கப்படுகிறது. அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும்120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
OIS ஆதரவு கொண்ட 108எம்பி மெயின் கேமரா (f/1.75 aperture) + 2எம்பி மேக்ரோ + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 20 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த போன்.. அதேபோல் 5ஜி, டூயல் 5ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி, புளூடூத் 5.3 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போனில் உள்ளன.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன் இன்-டிஸ்பிேளை கைரேகை சென்சார், ஐஆர் சென்சார், டூயல் மைக்ரோபோன்ஸ், IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust/Splash Resistant), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன்.


Click it and Unblock the Notifications








