Home
Mobile

தலைவன் வேற ரகம்.. ரூ.25,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான பட்ஜெட்டில் வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் பீச்சர்களுடன் பிரீமியம் லெதர் பேக் பேனலுடன் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி சீரிஸ் (Infinix Note 40 Pro 5G Series) போன்களை களமிறக்குகிறது.

ஏப்ரல் மாதத்தில் இந்த போன்களின் வெளியீடு இருக்குமென்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆகவே, இந்த போன்களுக்கான மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் பக்கா பிரீமியமாக இந்த போன்கள் வெளியாக இருக்கின்றன.

தலைவன் வேற ரகம்.. ரூ.25,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா போன்!

இந்த போன்களின் குளோபல் வேரியண்ட்கள் மார்ச் 18ஆம் தேதியே வெளியாகிவிட்டது. 108 எம்பி கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 20W வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருந்தும், ரூ.25,000 பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டதால்,இந்தியா உள்பட உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.

இந்த குளோபல் வேரியண்ட்களை பொறுத்தவரையில், இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மற்றும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி என்று 2 மாடல்கள் வெளியாகின. இவற்றின் அம்சங்கள் மற்றும் விலையே இந்தியாவில் வெளியாகும் மாடல்களிலும் இருக்க போகிறது. ஆகவே, குளோபல் வேரியண்ட்களின் அம்சங்களை பார்ப்போம்.

இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி, ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 40 Pro 5G, Pro Plus 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் சிப்செட் மற்றும் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM-8-256 GPU) கிராபிக்ஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உள்ளது.

தலைவன் வேற ரகம்.. ரூ.25,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா போன்!

ஜேபிஎல் சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன. ப்ரோ பிளஸ் மாடலில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் + 20W வயர்லெஸ் சார்ஜிங் + ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. ப்ரோ போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் + 20W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வருகிறது. ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது.

ப்ரோ பிளஸ் 5ஜி போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. OIS சப்போர்ட் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்டுள்ளது. 32 எம்பி செல்பீ வருகிறது. வின்டேஜ் கிரீன் (Vintage Green), அப்சிடியன் பிளாக் (Obsidian Black), டைட்டன் கோல்டு (Titan Gold) ஆகிய கலர்கள் கொண்டிருக்கிறது.

கிரீன் வேரியண்ட்டில் லெதர் பேக் பேனல் வருகிறது. ப்ரோ 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,960ஆகவும், நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,620ஆகவும் இருக்கிறது. இது குளோபல் மாடல்களின் விலையாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 40 Pro 5G With 20W Wireless Charging Launch on April Sale From Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X