Home
Mobile

காத்திருப்பு ஓவர்.. ஹாலோ ஏஐ லைட்னிங்.. 108MP கேமரா.. இந்தியாவுக்கு வரும் Infinix போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. குறிப்பாக இந்த போன் ஆக்டிவ் ஹாலோ ஏஐ லைட்னிங், 108எம்பி கேமரா, 45 வாட்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, வரும் ஏப்ரல் 12-ம் தேதி இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் உடன் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி (Infinix Note 40 Pro+ 5G) போன் கூட அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

காத்திருப்பு ஓவர்.. இந்தியாவுக்கு வரும் Infinix போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Infinix Note 40 Pro 5G specifications): 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இது 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.

ஹாலோ ஏஐ லைட்னிங் (Active Halo AI Lighting) எனும் புதிய தொழில்நுட்ப வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக ஹாலோ ஏஐ லைட்னிங் ஆனது வாய்ஸ் கமாண்ட்டுகள் மற்றும் பிற செயல்பாடுகளை லைட்டிங் எபெக்ட்களுடன் ஒருங்கிணைக்கும்.

சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம்(Octa Core MediaTek Dimensity 7020 6nm) சிப்செட் உடன் இந்த அசத்தலான இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன் வெளிவரும். இதுதவிர கேமிங் பயனர்களை கவரும் வகையில் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM-8-256 GPU)கிராபிக்ஸ் கார்டு கூட உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி விற்பனைக்கு வரும். மேலும் நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன்.

108 எம்பி மெயின் கேமரா (OIS) + 2 எம்பி மேக்ரோ கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

காத்திருப்பு ஓவர்.. இந்தியாவுக்கு வரும் Infinix போன்.. எந்த மாடல்?

எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) இயங்குதள வசதியுடன் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் மைக்ரோபோன்கள், ஐஆர் சென்சார், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், 20W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளன. மேலும் இந்த இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி போன் ஆனது இந்தியாவில் ரூ.24000 விலையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

photo courtesy: Infinix

Best Mobiles in India

English summary
Infinix Note 40 Pro 5G India launch date leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X